நூதன முறையில், பொதுமக்களிடம் வாக்கு சேகரித்த, அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வன். முந்தைய அதிமுக அரசின் சாதனை களை கூறி, தீவிர வாக்கு சேகரிப்பு..


தமிழகத்தில், வருகிற ஏப்ரல்19-ஆம் தேதி நடைபெற உள்ள, நாடாளுமன்ற தேர்தலைஒட்டி,அரசியல்தேர்தல்களம் சூடுபிடிக்க துவங்கியுள்ள நிலையில் ,கொளுத்தும் கோடைவெப்பத்தையும் பொருட்படுத்தாத அரசியல் கட்சி வேட் பாளர்கள்,மக்களிடம் நூதன முறை யில்,வாக்குகளை சேகரித்து வருகின் றனர்.அதன் ஒருபகுதியாக, சத்திய மங்கலம் பகுதியில்,நீலகிரி நாடாளு மன்ற தொகுதி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் த.லோகேஷ் தமிழ்ச் செல்வன் முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தமி ழக மக்களுக்கு வழங்கிய சாதனை களை,எடுத்துரைத்தும், திமுக அரசு பொறுப்பேற்ற வுடன்,தமிழக மக்களு க்கு அதிமுக அரசு வழங்கிய, அரசின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை கை விட்டதை சுட்டிக் காட்டியும், மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான, பிஜேபி அரசின் தவறான, பொருளா தாரக் கொள்கையின் விளைவாக, அனுதினமும், ஏறி வரும் விலைவாசி உயர்வை சுட்டிக் காட்டியும், வாக்கு சேகரித்தும், விவசாயிகளிடம் ஏர் பூட்டி உழுதும்,கரும்பு வெட்டியும், மல் லிகை பூப்பறித்தும்,நெசவாளர்களி டம், கைத்தறி நெசவு மூலம் பட்டு புடவை நெய்து தந்தும், தனக்கு இர ட்டை இலை சின்னத்திற்கு வாக்களி க்க கேட்டு, பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இத்தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில், பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் அ.பண்ணாரி எம். எல்.ஏ. அதிமுக ஒன்றியச் செயலாளர்கள் என்.என். சிவராஜ்,சி.என்.மாரப்பன், வி.ஏ.பழனி சாமி, அரியப்பம்பாளையம் பேரூர் கழக செயலாளர் தேவ முத்து, முன் னாள் எம்.எல்.ஏக்கள்.எஸ்.ஈஸ்வரன், ஏ.டி.சரசுவதி, முன்னாள் மாவட்ட ஊரா ட்சி குழுத் தலைவரும், மாவட்ட எம். ஜி. ஆர். மன்றச் செயலாளருமான எஸ்.ஆர்.செல்வம்,மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பிரபாகரன்,ஊராட்சி மன் ற தலைவர்கள் எஸ்.எம்.சரவணன், ஆர்.சும்பிரமணியன், சத்யா சிவராஜ், மலர்விழி சரவணகுமார், மாவட்ட சார் பு அணி நிர்வாகிகள் எஸ்.எஸ். ஆறு முகம்,வெ.பெ.தமிழ்ச் செல்வி, வெங் கிடு சாமி மற்றும் அதி முக மாவட்ட, ஒன்றிய, வார்டு, கிளைக் கழக நிர் வாகிகள், ஒன்றிய குழு,பேரூராட்சி, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஊரா ட்சி மன்றத் துணைத்தலைவர்கள். மற் றும் கூட்டணி கட்சித் தலைவர்கள், சார்பு அணி நிர்வாகிகள், மகளிர் அணி, இளைஞர் இளம் பெண்கள் பாசறை நிர்வாகிகள், தகவல் தொழிட் நுட்ப அணியினர்,அதிமுக கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் உள் ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.




Previous Post Next Post