ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில், சொத்து வரி, ஜி.எஸ்.டி வரி உயர்வை கண்டித்து, கடை அடைப்பு


 மாநில அரசு பொதுமக்களின் சொத்துக்கள் மீது,வருடா வருடம், 6 சதவீத வரியும், அதை செலுத்துவதில் காலதாமதம் செய்தால் கூடுதலாக 1% அபராத வரியும் நிர்ணயம் செய்து உள்ளது. அதேபோல மத்திய அரசும், வியாபாரம் செய்கின்ற வணிக நிறுவனங்களுக்கு 18% ஜி.எஸ்.டி வரியை நிர்ணயம் செய்துள்ளது. 

அனைத்துப் பொதுமக்கள் மீதும், வியாபாரம் செய்கின்ற வணிகர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள இந்த வரி சுமைகளை நீக்கக் கோரியும், அநியாய வரிகளுக்கு எதிராக, 29-ம் தேதி இன்று வெள்ளிக்கிழமை காலை 6.00 மணிமுதல் மாலை 6.00 மணிவரை கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என,அனைத்து வணிகர் சங்கம் ,நகை வியாபாரிகள் சங்கம், ஜவுளிக்கடை உரிமையாளர்கள் சங்கம், ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம்,விநியோகஸ்தர்கள் சங்கம், மற்றும் அனைத்து வியாபாரிகள் சங்கம், தினசரி மார்க்கெட் காய்கறி வியாபாரிகள் சங்கம், நகராட்சி கடை வியாபாரிகள் சங்கம், மருந்து கடை உரிமையாளர் கள் சங்கம், வீடியோ & போட்டோ கிராபர்ஸ் அசோசியேசன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்தது.

அனைத்து அமைப்புகளின் அழைப்பின் பேரில், இன்று அதிகாலை முதலே பரபரப்பாக காணப்படும் சத்தியமங்கலம் தினசரி மார்க்கெட், பேருந்து நிலையம், மணிக்கூண்டு, வடக்கு பேட்டை  உள்ளிட்ட பகுதிகளில், மருந்து, பால் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் தவிர, பிற கடைகள், வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டு உள்ளன.

Previous Post Next Post