திருப்பூர் மாநகர் மாவட்ட புரட்சிதலைவி அம்மா பேரவை சார்பில் மாவட்டம் முழுவதும் இல்லந்தோறும் மாபெரும் திண்னை பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் அட்லஸ் லோகநாதன் மற்றும் காந்திநகர் பகுதி கழக செயலாளர் கருணாகரன் ஏற்பாட்டில் திருப்பூர் வடக்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட எஸ்ஏபி பகுதியில் திண்னை பிரச்சாரம் நடைபெற்றது.இதில் கழகத் தேர்தல் பிரிவு செயலாளர், திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளரரும், முன்னாள் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி.வி.ஜெயராமன் பிரச்சரத்தை தொடங்கி வைத்தார். திருப்பூர் வடக்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.என்.விஜயகுமார், தெற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சு.குணசேகரன் முன்னிலையில் அப்பகுதியில் உள்ள டீ கடையில் மக்களோடு மக்களாக அமர்ந்து டீ அருந்தி திண்னை பிரச்சாரம் செய்தனர். மேலும் அருகில் உள்ள பேருந்து நிறுத்தம் மற்றும் கடைகளிலும், வாகன ஓட்டிகளுக்கும் நோட்டீஸ் வழங்கி பிரச்சாரம் மேற்கொண்டனர்.
அப்போது திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் பேசுகையில் :-சட்டசபையில் திமுக ஆட்சி குறித்து புகழாரம் மட்டுமே செய்யப்படுகிறது, மக்கள் பிரச்சனை குறித்து பேசுவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது, சட்டசபையில் நான் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார், பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் ஆனந்தன், சூலூர் சட்டமன்ற உறுப்பினர் கந்தசாமி உள்ளிட்டோ விசைத்தறியாளர்களின் போராட்டம் குறித்து பேச முயற்சித்த போது அவர்கள் அதை மறுத்தனர், கடந்த ஒரு மாத காலமாக விசித்திரியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர் தற்போது வரை திமுக அரசு எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்றும், 5 லட்சம் தொழிலாளர்கள் கொண்ட விசைத்தறி தொழில் திமுக ஆட்சி காலத்தில் காணாமல் போய்விடும் என்ற அச்சம் உள்ளது, மின் கட்டணம் மற்றும் வரி உயர்வுக்குப் பிறகு திமுக தோழமைக் கட்சிகள் போராட்டம் செய்தார்களா?
மின் கட்டணம் மற்றும் வரி உயர்வால் திருப்பூரில் பனியன் தொழில் நடத்த முடியாமல் அம்பானியும், அதானியும் இதை எடுத்து நடக்கும் சூழ்நிலை உருவாகும் என்றும், சுற்றுச்சூழல் அழிவதற்கு ஸ்டாலின் மிக முக்கிய காரணமாக உள்ளார், சனாதன தர்மத்தை பேசியதால் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் ஆனார்.
அவர் வழியில் வந்த பொன்முடி பெண்களை இழிவாக பேசியுள்ளார். பொன்முடியால் தமிழ்நாடு முதல் கன்னியாகுமரி வரை அனைத்து பெண்களும் கொந்தளித்து உள்ளனர். திமுகவின் செயல் இந்தியாவில் மதக்கலவரத்தை உண்டாக்குகிறது. இன்று சாமானிய மக்கள் வீடு கட்ட முடியாத சூழ்நிலையில் உள்ளது. ஜல்லிக்கட்டு, சிமெண்ட், எம் சாண்ட் போன்றவற்றை விலை உயர்ந்துள்ளது, லஞ்சம் குறித்து மட்டுமே ஜல்லிக்கட்டு கொண்டு போக சூழ்நிலை உள்ளது. சட்டப்படி ஜல்லிக்கட்டு எடுத்துச் செல்ல சூழ்நிலை திமுக அரசு ஏற்படுத்தவில்லை என்றும், நமது குடும்பத்தார் பாதுகாப்பாக வெளியே சென்று வீட்டுக்கு வர வேண்டுமென்றால் 10 அமாவாசைக்குள் திமுகவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் அதற்கு நாம் அனைவரும் பாடுபட வேண்டும் அதற்கான பலன் அனைவருக்கும் கிடைக்கப்பெறும், மேலும் திமுக ஆட்சிக்கு வந்தால் மேல் ஆடையும் இருக்காது, கீழ் ஆடையும் இருக்காது அனைத்தையும் உருவி விடுவார்கள், அனைவரும் ஆதிகால மனிதர்கள் ஆகிவிடுவோம் என்றும், ஸ்டாலினைப் போல் டோபா மற்றும் பேண்ட் சட்டை மாட்டிக் கொண்டு இல்லாமல் எளிமையான விவசாய குடும்பத்தைச் சேர்ந்த முதல்வராக எடப்பாடியார் உள்ளார் என்றும், குடும்ப ஆட்சிக்கு இதத்தோடு முடிவு கட்டுவோம் என்றும் பேசினார். மேலும் அதிமுக தெருமுனை பிரச்சாரத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு மூன்று கம்பத்தில் மட்டும் மின் விளக்கை அணைத்து விட்டார்கள், இது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் பூலுவபட்டி பாலு, அன்பகம் திருப்பதி, கண்ணப்பன், பி.கே.எம்.முத்து, நாச்சிமுத்து, கனகராஜ், தங்கராஜ், ஹரிஹரசுதன், மார்க்கெட் சக்திவேல், கலைமகள் கோபால்சாமி, மார்க்கெட் சக்திவேல், பழனிவேலு, எஸ்.பி.என்.பழனிசாமி, ஏ.எம்.சதீஷ், திலகர்நகர் சுப்பு, வேல்குமார் சாமிநாதன், ஏ.எஸ்.கண்ணன், சிவளாதினேஷ், ஈஸ்வரன், ரங்கசாமி, அசோக்குமார், தனபால், ஆண்டவர் பழனிசாமி, சிலம்பரசன், அன்பு உள்பட பலர் பங்கேற்றனர்.