தமிழ் நாடு பொறியியல் சேர்க்கை - 2019 ; ஜூன் 25 ஆம் தேதி முதல் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு தமிழ் நாடு பொறியியல் சேர்க்கை - 2019 ஜூன் 25 ஆம் தேதி முதல் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு (Counselling) மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் திரு. கே.பி. அன்பழகன் அவர்கள் அறிவிப்பு

தமிழ் நாடு பொறியியல் சேர்க்கை - 2019 ஜூன் 25 ஆம் தேதி முதல் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு (Counselling) நடக்கிறதென உயர்கல்வித் துறை அமைச்சர் திரு. கே.பி. அன்பழகன் அவர்கள் அறிவித்துள்ளார். • பொறியியல் மாணாக்கர் சேர்க்கையின் முதல் கட்டமாக விண்ணப்பப்பதிவு மே 2-ஆம் தேதி முதல் மே 31-ஆம் தேதி வரை நடைபெற்றது. . அதைத் தொடர்ந்து 2வது கட்டமாக, 3.6.2019 அன்று சமவாய்ப்பு எண் (Random Number) ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக ஜூன் 7-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு அனைத்து மாவட்டங்களிலும் உள்ள 46 சான்றிதழ் சரிபார்ப்பு மையங்களில் நடைபெற்று முடிந்தது. அதன் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் ஜூன் 20 ஆம் தேதி வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக 25.6.2019 அன்று மாற்று திறனாளிகளுக்கான நேரடி கலந்தாய்வும், 26.6.2019 அன்று முன்னாள் இராணுவத்தினர் வாரிசுகளுக்கும், 27.6.2019 அன்று விளையாட்டு வீரர்களுக்கான நேரடி கலந்தாய்வு சென்னை, தரமணியில் உள்ள மையப் பாலிடெக்னிக் கல்லூரியில் (Central Polytechnic College, Taramani, Chennai 600 113) 2_6116 அரங்கில் (Auditorium) நடைபெறும். அதே போன்று தொழிற் பிரிவினருக்கு (Vocational Group) 26.6.2019 முதல் 28.6.2019 வரை அதே மையப் பாலிடெக்னிக் கல்லூரி (Central Polytechnic College, Taramani, Chennai 600 113) வளாகத்தில் உள்ள ஒருங்கிணைந்த தொழிற் கூட வளாகத்தில் (Centralized Workshop) நேரடி கலந்தாய்வு நடைபெற உள்ளது. தரவரிசைப் பட்டியல் வெளியிட்ட பின்பாக, சிறப்புப் பிரிவைச் சார்ந்த (Special Reservation) மாணாக்கர்கள் எந்தெந்த தேதிகளில் கலந்தாய்வு மையத்திற்கு வருகை புரிய வேண்டும் என்பதை தனித் தனியாக அவர்கள் விண்ணப்பப் பதிவின் போது பதிவு செய்த கைபேசி எண்ணில் (Mobile Number) குறுஞ்செய்தியும் (SMS) அவர்களுடைய மின்னஞ்சல் (Email ID) முகவரிக்கு தகவலும் அனுப்பி வைக்கப்படும். மேலும், 3.7.2017 அன்று பொதுப் பிரிவு (General Counselling) கலந்தாய்வு நடைபெறுவதில் எவ்வித மாற்றமும் இல்லை. . இது தொடர்பாக மாணாக்கர்களுக்கான சந்தேகம் ஏதேனும் இருப்பின், 044-22351014 மற்றும் 044-22351015 என்ற எண்ணிற்கு காலை 8.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை தொலைபேசியில் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என மாண்புமிகு உயர்க்கல்வித் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்.


Previous Post Next Post