ஜூன் 20-ல் பொறியியல் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு

பொறியியல் மாணாக்கர் சேர்க்கையின் முதல் கட்டமாக மே மாதம் 2-ஆம் தேதி முதல் 31- ஆம் தேதி வரை சேர்க்கைக்கான பதிவு இணையதள வாயிலாக நடைபெற்றது. • அதனைத் தொடர்ந்து கடந்த 3.6.2019 அன்று சமவாய்ப்பு எண் எனப்படும் Random எண் வழங்கப்பட்டது. • சான்றிதழ் சரிபார்க்கும் பணியானது அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மையங்களிலும் 7.6.2019 முதல் 13.6.2019 வரை நடைபெற்று சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நிறைவடைந்துள்ளன. ஏற்கெனவே, அட்டவணைப்படி ஆரம்பிக்கப்பட வேண்டிய சான்றிதழ் சரிபார்ப்பு 6 ஆம் தேதிக்கு பதிலாக 7 ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டதனாலும், இறுதியாக கூடுதல் ஒரு நாள் 13 - ஆம் தேதிக்கும் சான்றிதழ் சரிபார்க்கும் பணி நீட்டிக்கப்பட்டதாலும், மேலும் தமிழகம் முழுவதிலும் உள்ள 46 TFC - சான்றிதழ் சரிபார்ப்பு மையங்களில் இருந்து அனைத்து சரிபார்ப்பு சான்று விவரங்களும் சென்னை அலுவலகத்திற்கு கொண்டு வந்து உயர்மட்ட கண்காணிப்பு சரிபார்ப்பு பணி செய்ய வேண்டியுள்ளதாலும், உத்தேசமாக 17.6.2019 அன்று நடைபெறுவதாக இருந்த Rank List பட்டியல் வெளியீடு 20.6.2019 அன்று நடைபெறும் என்றும், Rank List பட்டியல் அனைத்தும் மாணாக்கர்கள் பார்வைக்கு 4 நாட்கள் வைக்கப்படும் எனவும், இது தொடர்பான புகார்கள் / Grievances இருப்பின் 044-22351014 அல்லது 044-22351015 என்ற தொலைபேசி எண்ணிற்கு தெரிவிக்கலாம் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.


Previous Post Next Post