திருப்பூர் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலராக ஆர்.குமார் பதவியேற்பு

திருப்பூர் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலராக ஆர்.குமார் பதவியேற்றுள்ளார்.


 திருப்பூர் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலராக பதவி ஏற்றுள்ள ஆர்.குமார் ஏற்கனவே திருப்பூர் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்திலும், வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்திலும் ஆர்.டி. ஓ., வின் நேர்முக உதவியாளராக பணியாற்றியவர். பணிமூப்பு அடிப்படையில், திருப்பூர் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலராக பதவியேற்றார். அவருக்கு திருப்பூர் மாநகரை சேர்ந்த முக்கியஸ்தர்கள் பலர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.