திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ அலுவலகம் திறப்பு

திருப்பரங்குன்றம் பகுதியில் அமைந்துள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திமுக சட்டமன்ற உறுப்பினர் சரவணன் திறந்து வைத்தார்.தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்,


வெற்றி பெற்ற பின்பு அனைத்து பகுதிகளுக்கும் சென்று நன்றி அறிவிப்பை தெரிவித்திருக்கிறேன்.
மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி மக்கள் குடிநீர் பிரச்சனை அதிகமாக இருக்கிறது என்று குற்றம்சாட்டி வருகின்றனர்.
கடந்த ஆட்சியில் 8 வருடமாக சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் மோசமான நிலையில் இருந்தது.இன்று அலுவலகத்தை சுத்தப்படுத்தி தயார் செய்து வைத்துள்ளோம்.8 வருட காலமாக சட்டமன்ற உறுப்பினரை நாங்கள் கண்ணில் கூட பார்த்ததில்லை என்று மக்கள் கூறி வருகின்றனர்.
வருகிற 2 வருட முடிவில் திமுக ஆட்சி அமைக்கும்.
சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மக்களின் வசதிக்காக ஈ. சேவை மையம் அமைக்கப்பட உள்ளது.மக்கள் அனைவரும் நேரடியாக வந்து புகார்களை தெரிவிப்பதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருக்கிறது.,மதுரை மாநகரில் 100 வார்டுகளிலும் குடிநீர் பிரச்சனை இல்லாமல் சீராக இருக்கிறது என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார்,அது குறித்த கருத்துக்கு "கூட்டுறவுத் துறை அமைச்சர் கூறியது குடிதண்ணீர் அல்ல.
டாஸ்மாக் தண்ணீரை சொல்லி வருகிறார்"
திருப்பரங்குன்றம் தொகுதியில் 90 பள்ளிகள் உள்ளது, அனைத்து பள்ளிகளிலும் முறையான கழிப்பறை வசதிகளும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி இல்லை.எனவே
அனைத்து பள்ளிகளிலும் கழிப்பறை வசதிகளும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியும் செய்துதர ஏற்பாடு செய்யப்படும்.மீதமுள்ள இரண்டு வருடத்தில் நான் மக்களிடத்தில் நல்ல பெயர் எடுப்பேன் என்று என்னை தடுப்பதற்கு பல இடையூறுகளை ஆளுங்கட்சியினர் செய்வதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என்று தெரிவித்தார்.