புதுச்சேரி மாநிலத்திற்காக புதிய மேம்படுத்தப்பட்ட ஹேவர்ட்ஸ் 5000 அறிமுகம்

புதுச்சேரி, ஜூன். 16 நுகர்வோர்களின் சுவை மற்றும் விருப்பத்திற்கு ஏற்ற வகையில் புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட புத்துணர்வு அளிக்கக்கூடிய ஹேவர்ட்ஸ் 5000 பீரை அன்ஹுசர் பஷ் இன்பெவ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. சிறந்த தரம் மற்றும் சுவையை கருத்தில் கொண்டு இந்த பீர் தயாரிக்கப்பட்டுள்ளது. பார்லி பொருட்களுடன் அதிக வலிமையை தரக்கூடிய வகையில் இந்த பீர் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பீரை புதுச்சேரியை சேர்ந்த சிகா ப்ரூவரிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த அறிமுக நிகழ்ச்சியில், அன்ஹுசர் பஷ் இன்பெவ் நிறுவனத்தின் தெற்காசிய தலைவர் பென் வெர்ஹார்ட் கூறுகையில், கடந்த பல வருடங்களாக ஹேவர்ட்ஸ் இந்திய பீர் தொழில் துறையில் வலுவான பா ர ம் ப ரி ய த் ைத யு ம் முன்னணி நிலையையும் ஹேவர்ட்ஸ் 5000 த க் க ைவ த் து ள் ள து . இந்த பகுதியில் பீர் தயாரிப்பில் மட்டும் இது முன்னணியில் இல்லை . புதுச்சேரியில் கடந்த 30 ஆண்டுகளாக ஹேவர்ட்ஸ் 5000 தலைமைத்துவ நிலையிலும் சிறப்பாக உள்ளது. புதிய ேம ம் ப டு த் த ப் ப ட் ட முறையில் த யா ரி க் க ப் பட் டு ள் ள இந்த பீர், எங்களின் வலுவான வளர்ச்சிக்கான தொடர் பயணமாக அமையும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம் என்று தெரிவித்தார். புதுச்சேரியின் நிலைத்த வளர்ச்சிக்கான பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து சிகா ப்ரூவரிஸ் செய்து வருகிறது. இந்த ஆண்டின் துவக்கத்தில் பிரதமரின் தூய்மை பாரத திட்டத்தின் ஒரு பகுதியாக நீர் நிறைந்த புதுச்சேரி என்னும் திட்டத்திற்காக புதுச்சேரி கவர்னர் கிரண் பேடியால் இந்நிறுவனம் பாராட்டைப் பெற்றுள்ளது. இந்நிறுவனம் தனது தொழிற்சாலையை அடுத்த உள்ள மேட்டு வாய்க்கால் கால்வாயை 2 கிலோ மீட்டருக்கு சுத்தம் செய்து, அதில் இருந்த சேறு மற்றும் சகதியை நீக்கி, பருவ மழை காலங்களில் தண்ணீர் அடைப்பு ஏற்படாமல் விவசாயம் மற்றும் நீர் நிலைகளுக்கு தண்ணீர் செல்லும் வகையில் சீரமைத்தது. இதன் காரணமாக இந்நிறுவனம் கவர்னரின் பாராட்டைப் பெற்றது. 


Previous Post Next Post