கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம் கார்த்திக் எம்.எல்.ஏ., அறிவிப்பு

வருகின்ற 19.6.2019 புதன்கிழமை காலை 10 மணியளவில் டவுன்ஹால் மாநகராட்சி அலுவலகம் முன்பு சீரான முறையில் குடிநீர் வழங்ககோரியும், குடிநீர் பஞ்சத்திற்கு காரணமான உள்ளாட்சிதுறை அமைச்சர் திரு.S.P.வேலுமணி பதவி விலககோரியும், வெளிநாட்டு தனியார் நிறுவனமான சூயஸ் நிறுவனத்தோடு போட்ட ஒப்பந்தத்தை உடனே ரத்து செய்ய வேண்டும் என்று கோரியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். மாநகர் மாவட்ட பொறுப்பாளர்  நா.கார்த்திக் எம்.எல்.ஏ. அறிவிப்பு.கடந்த 8 ஆண்டு காலமாக குடிநீர் திட்டம் தொடர்பாக உள்கட்டமைப்பு பணிகளை மாநகராட்சி நிர்வாகம் சரியாக செய்யாத காரணத்தால் கோவை மாநகரத்தில் கடுமையான குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கோவை மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு 15 நாட்கள் , சில இடங்களில் 20 நாட்களுக்கு ஒருமுறைதான் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு பருவமழை நன்றாகப் பெய்தும், கோவைக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி , பில்லூர் , ஆழியாறு போன்ற அணைக்கட்டுகள், நீர் நிலைகள் அனைத்தும் நிரம்பி வழிந்தும், அந்த நீரை சேமித்து வைப்பதற்கு இந்த அரசும், உள்ளாட்சிதுறையும் எந்த நடவடிக்கையும் செய்யவில்லை.மேலும் கோவை மாநகருக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் குடிநீர் குழாய்கள் அடிக்கடி பழுதடைந்து , உடைந்து,கசிவுகள் ஏற்பட்டு பெருமளவில் குடிநீர் வீணாகி சாலைகளில் செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் குடி நீர் குழாய்கள் பழுதடைந்து பல நாட்கள் ஆகியும் பழுது சரி செய்யப்படுவதில்லை .கோவை மாநகராட்சியில் குடிநீர் விநியோகம் செய்வதற்கு , கோவை மாநகராட்சியில் 26 ஆண்டுகளுக்கு, மாநகராட்சி நிர்வாகம் ரூ. 3 ஆயிரத்து 150 கோடிக்கு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கியிருக்கிறது. ஆனால்  தற்பொழுது குடிநீர் விநியோக பணிகளை நிர்வகித்து வரும் இந்த சூயஸ் நிறுவன பணியாளர்கள் முறையான குடிநீர் விநியோகம் மற்றும் உடைப்பு ஏற்படும் குடிநீர் குழாய்களை உடனுக்குடன் சரி செய்யாமல் குளறுபடி செய்து வருகின்றனர்.இந்த சூயஸ் நிறுவன பணியாளர்களின் நிர்வாக குளறுபடிகளால் ,மாநகரத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் குடிநீர் விநியோகத்தில் பலத்த பின்னடைவு ஏற்பட்டு, பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் சரியான முறையில் செய்யாமல் இருப்பதால் குடிப்பதற்குக் கூட குடிநீர் இல்லாமல் பொதுமக்கள் மிகவும் தவித்து வருகிறார்கள்.கோவை மாநகராட்சி நிர்வாகம் வெளிநாட்டு தனியார் நிறுவனமான சூயஸ் நிறுவனத்தோடு போட்ட ஒப்பந்தத்தை உடனே ரத்து செய்ய வேண்டும்.பொது மக்களுடைய வாழ்வாதாரமாக திகழக்கூடிய, உயிர் நாடியாகத் திகழக்கூடிய குடிநீர் விநியோகத்தில் கோவை மாநகராட்சி நிர்வாகம் தொடர்ந்து கவனக்குறைவாக அலட்சியப்போக்கையே கடைப்பிடித்து வருவதை கோவை மாநகர் மாவட்ட திமுக வன்மையாக கண்டிக்கிறது. மற்றும் கோவையை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் உள்ளாட்சி தேர்தல் நடத்தாமல் குடிநீர் பஞ்சத்தை ஏற்படுத்தி செயலற்று முடங்கிகிடக்கின்ற உள்ளாட்சி துறையின் அமைச்சர் திருS.P.வேலுமணி அவர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று கழக தலைவர் தளபதி அவர்கள் வேண்டுகோளும்,கண்டனத்தோடும் தெரிவித்து உள்ளார். ஆகவே கோவை மாநகராட்சி நிர்வாகம் சீரான முறையில் குடிநீர் வழங்ககோரியும், குடிநீர் பஞ்சத்திற்கு காரணமான திரு S.P.வேலுமணி பதவி விலக கோரியும் வருகின்ற 19.6.19 புதன்கிழமை காலை 10மணியளவில் டவுன்ஹால் கோவை மாநகராட்சி அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொறுப்புகுழு உறுப்பினர்கள், தலைமைகழக நிர்வாகிகள், பொதுகுழு உறுப்பினர்கள்,பகுதி கழக நிர்வாகிகள், வட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள்,தொழிலாளர் அணியை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள், செயல் வீரர்கள், பொதுமக்கள், நகர்நலச்சங்ககள்,இளைஞர்கள், மாணவர்கள் என பெரும் திரளாக பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.


Previous Post Next Post