டெய்ரி டே அறிமுகம் செய்யும் சில்லி குவாவா!

 

கொய்யா பழக்கலவை மிளகாய்த்தூள் மற்றும் உப்பு ஆகியவையின் சுவைமிக்க கலவை 


கோயம்புத்தூர், 2019, ஜுன் 17 : உங்களது தோழர்களோடும், தோழிகளோடும், அப்போது தான் பறித்த கொய்யாப்பழத்தில் சிறிது மிளகாய்ப்பொடியையும், உப்பையும் தூவி பகிர்ந்து உண்ட உங்கள் இளமைக்கால பருவத்தின் மகிழ்ச்சியான நினைவுகளை இப்போது மீண்டும் நனவாக்குங்கள். கொய்யா பழக்கூழ், மிளகாய்த்தூள் மற்றும் உப்பின் அற்புத சுவைமிக்க கலவையாக தயாரிக்கப்பட்டிருக்கும் சில்லி குவாவா ஐஸ்கிரீம் ஸ்டிக் அறிமுகத்தின் மூலம், இந்தியாவின் முன்னணி ஐஸ்கிரீம் பிராண்டான டெய்ரி டே, உங்களை பின்னோக்கி அந்த இனிமையான குழந்தைப்பருவ காலத்திற்கே அழைத்துச்செல்லும் வாக்குறுதியை வழங்குகிறது. புத்தம் புதிய கொய்யாப்பழத்தை நிஜமாக கடித்து உண்பதைப்போலவே ஒரு இனிமையான சர்பத்தில் கொய்யாவின் உண்மையான சுவையை சில்லி குவாவா உங்களுக்கு வழங்குகிறது. 60 மி.லி. ஸ்டிக் ரூ. 20 என்ற விலையில் கோயம்புத்தூர்ரெங்கும் உள்ள அவுட்லெட்டுகளில் இப்புதிய ஐஸ்கிரீம் கிடைக்கிறது. 


டெய்ரி டே நிறுவனத்தின் இயக்குநரான திரு. M N ஜெகநாத் பேசுகிறபோது, 'உணவுத்துறையில் அதிக புத்தாக்கமான துணைப்பிரிவுகளில் ஒன்றாக ஐஸ்கிரீம் தயாரிப்புத் தொழில்பிரிவு இருக்கிறது. தரம் மற்றும் சுவைகள் ஆகிய அம்சங்களில் மிகச்சிறந்ததை எமது வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டுமென்பதற்காக டெய்ரி டேயில் நாங்கள் தொடர்ந்து அயராது பணியாற்றி வருகிறோம். பான் டிவிஸ்ட், காஜர் ஹல்வா, குலாப் ஜாமூன் போன்ற இந்தியாவிற்கே உரிய தனித்துவமான, நினைத்தாலே உமிழ்நீர் சுரக்கச் செய்யும் எமது சுவைமிக்க தயாரிப்பு அணிவரிசையில் இப்போது சில்லி குவாவா சேர்ந்திருக்கிறது. டெய்ரி டேயிலிருந்து இதுபோல இன்னும் அதிக புதுமையான, புதிதான சுவைகளில் ஐஸ்கிரீம் தயாரிப்புகளை, ஐஸ்கிரீம் பிரியர்கள் நிச்சயமாக எதிர்பார்க்கலாம்" என்று கூறினார். 


பல்வேறு அளவுகளில் கப்புகள், கோன்கள், ஸ்டிக்குகள், கப்ஸ் மற்றும் பிற புதுமையான வடிவமைப்புகளில் 30-க்கும் அதிகமான சுவைகளில் 150-க்கும் கூடுதலான தயாரிப்புகளை டெய்ரி டே வழங்கி வந்திருக்கிறது. வெனிலா, ஸ்ட்ராபெர்ரி, சாக்லேட், பிஸ்தா, பட்டர்ஸ்காட்ச், மேங்கோ போன்ற சந்தையில் பிரபலமான சுவைகளுக்கும் கூடுதலாக ஐஸ்கிரீம் கேக், பான் டிவிஸ்ட், ராஜ்பாக், குலாப் ஜாமூன், காஜர் ஹல்வா மற்றும் ஐஸ்கிரீம் சாண்ட்விச் போன்ற தனது தனித்துவமான அறிமுகமான சுவைகளில் ஐஸ்கிரீம் வகையினங்களை டெய்ரி டே கொண்டிருக்கிறது. 


தென்னிந்தியாவில் முன்னணி ஐஸ்கிரீம் பிராண்டாக திகழும் டெய்ரி டே, சமீபத்தில் மஹாராஷ்டிரா மாநிலத்திற்குள்ளும் நுழைந்திருக்கிறது. புனே, கோல்காபூர், பீட், சதாரா உட்பட மாநிலத்தின் பல்வேறு பெருநகரங்கள் மற்றும் நகரங்களில் 2000 விற்பனையகங்களில் டெய்ரி டே ஐஸ்கிரீம் தயாரிப்புகள் கிடைக்கின்றன. புனே மாநகரில் மட்டும் 1000-க்கும் அதிகமான விற்பனையகங்களோடு விற்பனைக்காக கூட்டுவகிப்பை இது மேற்கொண்டிருக்கிறது.Previous Post Next Post