திருப்பூர் பள்ளிக்கு வந்த மாணவி சுருண்டு விழுந்து பலி

திருப்பூர் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவி வகுப்பறையில் மயங்கி விழுந்து பலியானார்திருப்பூர் அம்மாபாளையம் பகுதியில் குடியிருந்து வரும் விக்னேஷ் புவனேஸ்வரி தம்பதியரின் மகள் வர்ஷா குமார் நகர் பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார் இன்று காலை வழக்கம் போல 7 மணிக்கு பள்ளிக்கு ஆட்டோ மூலம் சென்ற வர்ஷா வகுப்பறையில் காலை ஏழு முப்பது மணிக்கு மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார் இதனையடுத்து பள்ளி ஆசிரியர்கள் மாணவியை திருப்பூர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர் அங்கு முதலுதவி அளித்த பின் மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர் அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார் பள்ளிக்கு சீக்கிரம் செல்ல வேண்டும் என அவசர அவசரமாக வந்த சிறுமி வகுப்பறையிலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது


Previous Post Next Post