தமிழ் மொழி சிறப்பு ஒரு நாள் பயிற்சி முகாம்

   தமிழ்ப் பண்பாட்டு மையம் மற்றும் சுப்ரீம் மொபைல்ஸ் இணைந்து நடத்திய தமிழ் மொழி சிறப்பு ஒரு நாள் பயிற்சி முகாம் குமரன் சாலையில் உள்ள அரிமா சங்க அரங்கத்தில் நடைபெற்றது.


   இந்நிகழ்ச்சியை சுப்ரீம் மொபைல்ஸ் நிர்வாக இயக்குநர் திரு.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். அரிமா சங்க தலைவர் திரு.சிவக்குமார் வரவேற்றார்.இப் பயிற்சி வகுப்பில் தமிழில் பிழையின்றி  எழுத, உச்சரிக்க 5-ம் வகுப்பிற்கு மேல் பயிலும் மாணவ, மாணவியர்க்கு சிறப்புப் பயிற்சி வழங்கப்பட்டது. பயிற்சியை சென்னையை சேர்ந்த நல்லாசிரியர் விருது பெற்ற ஓய்வு  பெற்ற தமிழாசிரியை பா.குமுதராஜாமணி. MA Blit, அவர்கள் " விரலசைவு விளையாட்டு" எனும்  எளிய முறையில் தமிழ்ப் பயிற்சி வழங்கினார். இவ் வகுப்பில் எழுத்துக்களின் வடிவம், சொல், நீட்டெழுத்துகள்,துணை  எழுத்துக்கள், கொம்பு எழுத்துக்கள், சுழி எழுத்துக்கள், ஒற்றெழுத்துக்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.. மேலும் ழகரம், றகரம்,  னகரம்  வரும் இடங்கள்,இலக்கணம்,பகுபத உறுப்புகள், சந்திப்பிழை, விகாரம், விகுதிகள், ஐகார குறுக்கம், தினை உறுப்புகள் , வினை, வினைச் சொல்,வினைமுற்று ,அணிகள் குறித்து விளக்கமளித்தார்.. இந்நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர். நிகழ்வினை தமிழ்ப் பண்பாட்டு மைய ஒருங்கிணைப்பாளர் யோகி செந்தில் ஒருங்கிணைத்தார்.


Previous Post Next Post