திருப்பூர் 55 வது வார்டில் உடற்பயிற்சி கூடம் அமைத்து தர வேண்டும்: எம்.எல். ஏ., சு. குணசேகரனிடம் இளைஞர்கள் கோரிக்கை மனு

 திருப்பூர் 55 வது வார்டில் உடற்பயிற்சி கூடம் அமைத்து தர வேண்டும்

எம்.எல். ஏ., சு. குணசேகரனிடம் இளைஞர்கள் கோரிக்கை மனு

 

 

 

 

திருப்பூர் மாநகராட்சி, புதிய 55 வது வார்டுக்குட்பட்ட  டி.எஸ்.கே.நகர் ரிசர்வ் சைட்டில் உடற்பயிற்சி செய்வோர் மற்றும் பொதுமக்கள் சார்பில், திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ., சு. குணசேகரனிடம் அளிக்கப்பட்ட கோரிக்கை மனுவில் கூறி இருப்பதாவது;

திருப்பூர் மாநகராட்சி,  55 வது வார்டுக்குட்பட்ட (பழைய 51 வது வார்டு) டி.எஸ்.கே.நகர் பகுதியில் ரிசர்வ் சைட் இடம் உள்ளது. ( நகர அளவை எண்கள்: O/11/14/34, O/11/15/1,2pt). மேற்படி இடத்தில் திருப்பூர் டி.எஸ்.கே.நகர், பெரிச்சிபாளையம், வெள்ளியங்காடு, திரு.வி.க நகர், கோபால் நகர், கரட்டாங்காடு, செரங்காடு, சந்திராபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 200 க்கும் மேற்பட்டவர்கள் உடற்பயிற்சி, விளையாட்டு பயிற்சி மேற்கொண்டு வருகிறோம். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த இடத்தில் உடற்பயிற்சி, விளையாட்டு பயிற்சி மேற்கொள்வதால் தேவையான உபகரணங்கள் சிலவற்றை நாங்கள் ஒருங்கிணைந்து வாங்கி பயிற்சி மேற்கொள்கிறோம். இந்த இடத்தில் தாங்கள் அனைத்து உபகரணங்களை உள்ளடக்கிய நவீன உடற்பயிற்சி கூடம் அமைத்து தந்தால் இப்பகுதி மக்கள், இளைஞர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஆகவே தாங்கள் மேற்படி இடத்தில் அனைத்து உபகரணங்களும் கொண்டதாக நவீன உடற்பயிற்சி கூடம் அமைத்து தர பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

Previous Post Next Post