திருப்பூர்: தண்ணீரில் அமர்ந்து மழை வேண்டி யாகம் - விஜயகுமார் எம்.எல். ஏ., நடத்தி வைத்தார்

திருப்பூர் ஒன்றிய அதிமுக சார்பில் திருப்பூரில் உள்ள கோவில்களில் நடந்த யாகத்தில் அர்ச்சகர்கள் பாத்திரத்தில் வைக்கப்பட்ட தண்ணீரில் அமர்ந்து மழை வேண்டி யாகண்பூஜைகள் செய்தனர்.


திருப்பூர் ஒன்றிய அதிமுக சார்பில், திருப்பூர் பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் கோவில், பூளுவபட்டி கரியகாளியம்மன் கோவில், வேலம்பாலையம் ஜலகண்டேஸ்வரர் கோவில், கொங்கு நகர் அம்மன் கோவில் ஆகிய இடங்களில் மழை வேண்டி சிறப்பு யாக பூஜைகள் நடத்தப்பட்டது. திருப்பூர் வடக்கு எம்.எல். ஏ கே.என்.விஜயகுமார் யாக பூஜைகளை தலைமை தாங்கி நடத்தி வைத்தார். இதில் மழை வேண்டி ஹோம பூஜைகள் நடந்து. தொடர்ந்து, அர்ச்சகர்கள் பாத்திரத்தில் வைக்கப்பட்ட தண்ணீரில் அமர்ந்து மழை வேண்டி வேத மந்திரங்கள் முழங்கினர். தொடர்ந்து யாக சாலை சாந்தி பூஜைகள் நடத்தப்பட்டது.


Previous Post Next Post