அப்பலோவின் ‘என்டுமேக்ஸ்’ டயர் அறிமுகம்; பிக் அப் வாகனங்களுக்கு பொருத்தமானது


 


கோயம்புத்துார், ஜூன் 16, 2019:
வேகமாக வளர்ச்சி பெற்று வரும் பிக்–அப் டிரக்குகளின் வளர்ச்சியால் ஏற்படும் டயர் தேவைகளுக்காக அப்பலோ டயர் நிறுவனம், 'என்டோ மேக்ஸ்' என்ற டயரை அறிமுகம் செய்துள்ளது. இதன் தேவை இந்தியாவில் ஒரு மாதத்திற்கு 1,12,000 டயர்களாக உள்ளது. பிற வாகன வகைகளைக் காட்டிலும் மிக வேகமான வளர்ச்சியை பிக்அப் டிரக் பெற்று வருகிறது. 


அப்பலோ டயர் நிறுவனத்தின் சென்னையில் உள்ள சர்வதேச ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தில்  மலைப்பகுதி உட்பட அனைத்து சாலைகளிலும் செல்லும் வகையில் என்டுமேக்ஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது. வதோராவில் உள்ள அப்பலோ டயர் தொழிற்சாலையில், மாதம் ஒன்றுக்கு 80000 டயர்கள் தயாரிக்கும் கொள்ளளவை கொண்டுள்ளது.


அப்பலோ என்டோமேக்ஸ் எல்டி டயர்கள், மஹிந்திரா பொலிரோ, மேக்ஸி டிரக், அசோக்லேலாண்ட் டோஸ்ட் மற்றும் டோஸ்ட் பிளஸ், டாடா ஜெனான், யோாதா போன்ற வாகனங்களுக்கு பொருந்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இலகுரக வணிக வாகனங்கள் தேவை ஆண்டுக்கு 20% வளர்ச்சியை கொண்டுள்ளது. சிக்கனமான பொருளாதார ரீதியாகவும், இணைப்பு சாலைகள் மேம்பாடு, கிராமப்புற தேவை அதிகரிப்பு  ஆகியவற்றால் இத்தகைய வளர்ச்சி இந்தியாவில் ஏற்பட்டுள்ளது.
அப்பலோ ஆசியா பசிபிக் மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் பிரிவு தலைவர் சதீஷ் சர்மா பேசுகையில், '' வணிக வகை வாகனங்களின் பிரிவில், அப்பலோ டயர்ஸ் தொடர்ந்து  முன்னிலையில் இருந்து வரும் நிறுவனமாக உள்ளது; இதில், முதலிடத்தை பிடிப்பதற்கான இலக்கை நோக்கி செயல்பட்டு வருகிறது. இந்திய சந்தைக்கு ஏற்ப புதிய டயர்களை உற்பத்தி செய்யவும், பயன்பாட்டில் உள்ள டயர்களின் குறைபாடுகளை ஆராய்ந்து மேம்படுத்துவதிலும், தரம், சேவை, சந்தைப்படுத்துதலில் உள்ள இடைவெளிகள் போன்றவைகளில் கவனம் செலுத்த செயல்பாட்டு  குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.  என்டோமேக்ஸ் பிராண்ட் அறிமுகத்தால், பிக்–அப் வாகனங்களின் டயர் விற்பனையில் முன்னிலை பெறுவோம் என நம்பிக்கை கொண்டுள்ளோம்,'' என்றார்.


அப்பலோ என்டோமேக்ஸ் பிராண்ட் வடிவமைப்பதிலும், தயாரிப்பிலும், கட்டுமானத்திலும் முற்றிலுமான அணுகுமுறையை மேற்கொண்டு வருகிறது. நீண்ட கால உழைப்பு, அதிக மைலேஜ், எரிபொருள் சிக்கனம் உள்ளிட்டவை இந்த பிரிவில் உள்ள வாகனங்களுக்கு தேவையாக உள்ளது. இதற்கென அப்பலோ டயர்ஸ் நிறுவனம் மேற்கொண்டுள்ள தொழில்நுட்பங்கள்:


அவசியமான நேரத்திலும், அதிக சூடு ஏற்படாமல் இருக்கும் வகையிலும் உதவ, அதிகபட்ச இழுதிறன், கான்டர் பிளை, சுற்றிலுமான பெல்ட் அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.


எரிபொருள் பயன்பாட்டினை குறைக்கும் வகயைிலும், நீண்ட நாள் உழைக்கும் வகையிலும் தயாரிப்பு தொழில்நுட்பங்கள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. 
பீட்ஸ் பகுதியில், கூடுதலான அழுத்தமும், பிளிப்பர் பாதுகாப்புடன் அமைக்கப்பட்டுள்ளது. 
ட்ரெட் மைலேஜ் அதிகரிக்கவும்,குளிர்ந்த ஓட்டம்  தரவும் கட் அன்ட் சிப் தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. 
சிறந்த பிடிமானம், தேய்மானத்தை குறைக்கவும் குறுக்கும் நெடுக்கவுமான கூடுதல் அமைப்புகள் தரப்பட்டுள்ளன. 
கடினமான பிளாக்குகள், மூலைமுடுக்குகளில் எளிதாக ஸ்டியரிங் திருப்பவும், டயர் தேய்மானம் சீராக இருக்கும் வகையில் தயாரிப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது,