15 நாட்களுக்குள் தண்ணீரை தராவிட்டால் மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம் - ஐ,பெரியசாமி

15 நாட்களுக்குள் தண்ணீரை தராவிட்டால் மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம் என ஐ,பெரியசாமி தொரிவித்துள்ளார்

திண்டுக்கல் மாவட்டத்தில் நிலவும் கடுமையான குடிநீர் பற்றாக்குறையை போர்க்கால அடிப்படையில் நிவர்த்தி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை மாவட்ட ஆட்சியர் வினய்யிடம் திண்டுக்கல் ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் திமுக அமைச்சர் ஐ பெரியசாமி ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினர் சக்கரபாணி பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் நத்தம் சட்டமன்ற உறுப்பினர் ஆண்டிஅம்பலம் ஆகியோர் மனுவாக ஆட்சியரிடம் கொடுத்தனர்,

மாவட்ட ஆட்சியரை சந்தித்த பின்னர் ஐ,பெரியசாமி செய்தியாளர் களை சந்தித்து பேசியபோது....

குடிநீர் பிரச்சனை குறித்து பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்து இருக்கிறோம். இன்று பொதுமக்கள் 5 ரூபாயிலிருந்து 15 ரூபாய் வரை பணம் கொடுத்து குடிநீர் வாங்கி பயன்படுத்தும் அவல நிலை ஏற்பட்டுள்ளது , அவசர காலமாக கருதி உடனடியாக ஆழ்துளை கிணறுகள் அமைத்து தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், ஏற்கனவே கலைஞர் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட வேடசந்தூர் ரெட்டியார்சத்திரம் ஒட்டன்சத்திரம் கூட்டு குடிநீர் திட்டத்தை முழுமையாக ஆத்தூர் தொகுதியில் உள்ள ரெட்டியார்சத்திரம் ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் வழங்கப்படவேண்டும் ,

2010-ல் முடிக்கப்பட்ட பணி இந்த இரண்டு தொகுதிகளும் மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்தப்பட்டு குடிநீர் கொடுக்கப்படவில்லை, உபரி நீர் இருந்தும் அதை வேடசந்தூரில் இருக்கும் நீரேற்று நிலையத்தில் இருந்து முறையாக கையாளப்படவில்லை. புதிய காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் பெயரை மட்டுமே மாற்றி அதிமுகவினர் செயல்படுத்தி உள்ளனர், இரண்டு குடிநீர் திட்டத்தில் உபரியாக உள்ள தண்ணீரை பகிர்ந்து அளித்திருக்கலாம்,

இந்த நிலை நீடித்தால் குடிநீர் வழங்க நாங்களே களத்தில் இறங்கி பணிகளை செய்ய உள்ளதாக ஆட்சியரிடம் தெரிவித்து உள்ளோம், காமராஜர் நீர்த்தேக்கத்தில் இருந்து திண்டுக்கல் வரக்கூடிய குடிநீர் திட்டத்தில் பித்தளைபட்டி, பிள்ளையார்நத்தம், பொண்ணிமாந்துரை புதுப்பட்டி உள்ளிட்ட வழியோர கிராமங்களுக்கு கடந்த 60 ஆண்டுகளாக வழங்கப்பட்ட குடிநீரை வழங்காமல் புதிதாய் குழாய் பதிக்கப்பட்ட உடன் நிறுத்தப்பட்டிருக்கிறது, வழியோரம் வரக்கூடிய கிராமங்களுக்கு தண்ணீர் கொடுக்காமல் நிறுத்தி வைத்திருப்பதை கண்டிக்கின்றோம் ,பொண்ணிமாந்துரை புதுப்பட்டியில் தோல் தொழிற்சாலை யால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக எனது சட்டமன்ற தொகுதி நிதியிலிருந்து அங்கு ஒரு குடிநீர் தொட்டி கட்டிக் கொண்டிருக்கிறோம், அதற்கு தண்ணீர் கொண்டு வருவதற்கு ஒரு ஆணையை மாநகராட்சி அதிகாரிகள் கொடுக்க மறுக்கின்றனர், திமுக ஆட்சி காலத்தில் இதுபோன்ற பாரபட்சம் காட்டாமல் அனைத்து கிராமங்களுக்கும் தண்ணீரை பகிர்ந்து கொடுத்தோம், இந்த இரண்டு ஆண்டு காலத்தில் எனது தொகுதி நிதியிலிருந்து அனைத்து நிதிகளையும் தண்ணீர் மக்களுக்கு கொடுக்கும் திட்டத்திற்காக மட்டுமே பயன்படுத்தி வருகிறோம், அதுபோலத்தான் பழனி ஒட்டன்சத்திரம், நத்தம், பகுதிகளில் உள்ள திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பயன்படுத்தி வருகின்றனர், காமராஜர் நீர்த்தேக்கம் உள்ள ஆத்தூர் பகுதியில் கூட மக்கள் உப்பு நீரை மட்டுமே மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்,

மாநகராட்சியில் காட்டாட்சி தர்பார் நடந்து வருகிறது, இந்த நிலை தொடர்ந்து நீடித்து வந்தால் வேடசந்தூர் கோவிலூர் நீரேற்று நிலையத்தில் இருந்து நாங்களே தண்ணீரை திருப்பி எங்கள் பகுதிக்கு எடுத்துச் செல்ல உள்ளோம், 15 நாட்களுக்குள் தண்ணீரை தராவிட்டால் மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம் என மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்து இருக்கிறோம் ,

ஆத்தூர் காமராஜர் நீர்தேக்கத்திற்கு அருகில் தனியார் குடிநீர் எடுப்பதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும், இது குறித்து ஏற்கனவே பலமுறை நாங்கள் புகார் கொடுத்து இருக்கிறோம் ,நிலத்தடி நீரை எடுத்து விற்பனை செய்யக் கூடாது என சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது ,அந்த சட்டத்தை மாநகராட்சியும், மாவட்ட நிர்வாகம் அமல்படுத்த மறுப்பது ஏன்? உடனடியாக அந்த தொழிற்சாலையை நிறுத்தி சீல் வைக்க வேண்டும் .நான் ஏற்கனவே திமுக சார்பில் பல முறை மாவட்ட ஆட்சியரிடம் அந்த தொழிற்சாலையை மூட வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறேன். அதை தொடர்ந்து இயக்கி அனுமதி அளித்தது தற்போத…
மாநகராட்சியில் காட்டாட்சி தர்பார் நடந்து வருகிறது, இந்த நிலை தொடர்ந்து நீடித்து வந்தால் வேடசந்தூர் கோவிலூர் நீரேற்று நிலையத்தில் இருந்து நாங்களே தண்ணீரை திருப்பி எங்கள் பகுதிக்கு எடுத்துச் செல்ல உள்ளோம், 15 நாட்களுக்குள் தண்ணீரை தராவிட்டால் மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம் என ஐ,பெரியசாமி தொரிவித்துள்ளார்

திண்டுக்கல் மாவட்டத்தில் நிலவும் கடுமையான குடிநீர் பற்றாக்குறையை போர்க்கால அடிப்படையில் நிவர்த்தி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை மாவட்ட ஆட்சியர் வினய்யிடம் திண்டுக்கல் ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் திமுக அமைச்சர் ஐ பெரியசாமி ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினர் சக்கரபாணி பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் நத்தம் சட்டமன்ற உறுப்பினர் ஆண்டிஅம்பலம் ஆகியோர் மனுவாக ஆட்சியரிடம் கொடுத்தனர்,

மாவட்ட ஆட்சியரை சந்தித்த பின்னர் ஐ,பெரியசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது....

குடிநீர் பிரச்சனை குறித்து பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்து இருக்கிறோம். இன்று பொதுமக்கள் 5 ரூபாயிலிருந்து 15 ரூபாய் வரை பணம் கொடுத்து குடிநீர் வாங்கி பயன்படுத்தும் அவல நிலை ஏற்பட்டுள்ளது , அவசர காலமாக கருதி உடனடியாக ஆழ்துளை கிணறுகள் அமைத்து தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், ஏற்கனவே கலைஞர் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட வேடசந்தூர் ரெட்டியார்சத்திரம் ஒட்டன்சத்திரம் கூட்டு குடிநீர் திட்டத்தை முழுமையாக ஆத்தூர் தொகுதியில் உள்ள ரெட்டியார்சத்திரம் ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் வழங்கப்படவேண்டும் ,

2010-ல் முடிக்கப்பட்ட பணி இந்த இரண்டு தொகுதிகளும் மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்தப்பட்டு குடிநீர் கொடுக்கப்படவில்லை, உபரி நீர் இருந்தும் அதை வேடசந்தூரில் இருக்கும் நீரேற்று நிலையத்தில் இருந்து முறையாக கையாளப்படவில்லை. புதிய காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் பெயரை மட்டுமே மாற்றி அதிமுகவினர் செயல்படுத்தி உள்ளனர், இரண்டு குடிநீர் திட்டத்தில் உபரியாக உள்ள தண்ணீரை பகிர்ந்து அளித்திருக்கலாம்,

இந்த நிலை நீடித்தால் குடிநீர் வழங்க நாங்களே களத்தில் இறங்கி பணிகளை செய்ய உள்ளதாக ஆட்சியரிடம் தெரிவித்து உள்ளோம், காமராஜர் நீர்த்தேக்கத்தில் இருந்து திண்டுக்கல் வரக்கூடிய குடிநீர் திட்டத்தில் பித்தளைபட்டி, பிள்ளையார்நத்தம், பொண்ணிமாந்துரை புதுப்பட்டி உள்ளிட்ட வழியோர கிராமங்களுக்கு கடந்த 60 ஆண்டுகளாக வழங்கப்பட்ட குடிநீரை வழங்காமல் புதிதாய் குழாய் பதிக்கப்பட்ட உடன் நிறுத்தப்பட்டிருக்கிறது, வழியோரம் வரக்கூடிய கிராமங்களுக்கு தண்ணீர் கொடுக்காமல் நிறுத்தி வைத்திருப்பதை கண்டிக்கின்றோம் ,பொண்ணிமாந்துரை புதுப்பட்டியில் தோல் தொழிற்சாலை யால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக எனது சட்டமன்ற தொகுதி நிதியிலிருந்து அங்கு ஒரு குடிநீர் தொட்டி கட்டிக் கொண்டிருக்கிறோம், அதற்கு தண்ணீர் கொண்டு வருவதற்கு ஒரு ஆணையை மாநகராட்சி அதிகாரிகள் கொடுக்க மறுக்கின்றனர், திமுக ஆட்சி காலத்தில் இதுபோன்ற பாரபட்சம் காட்டாமல் அனைத்து கிராமங்களுக்கும் தண்ணீரை பகிர்ந்து கொடுத்தோம், இந்த இரண்டு ஆண்டு காலத்தில் எனது தொகுதி நிதியிலிருந்து அனைத்து நிதிகளையும் தண்ணீர் மக்களுக்கு கொடுக்கும் திட்டத்திற்காக மட்டுமே பயன்படுத்தி வருகிறோம், அதுபோலத்தான் பழனி ஒட்டன்சத்திரம், நத்தம், பகுதிகளில் உள்ள திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பயன்படுத்தி வருகின்றனர், காமராஜர் நீர்த்தேக்கம் உள்ள ஆத்தூர் பகுதியில் கூட மக்கள் உப்பு நீரை மட்டுமே மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்,

மாநகராட்சியில் காட்டாட்சி தர்பார் நடந்து வருகிறது, இந்த நிலை தொடர்ந்து நீடித்து வந்தால் வேடசந்தூர் கோவிலூர் நீரேற்று நிலையத்தில் இருந்து நாங்களே தண்ணீரை திருப்பி எங்கள் பகுதிக்கு எடுத்துச் செல்ல உள்ளோம், 15 நாட்களுக்குள் தண்ணீரை தராவிட்டால் மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம் என மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்து இருக்கிறோம் ,

 என்றார்.

Previous Post Next Post