விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி காலியானதாக அறிவிப்பு

 


 விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ ராதாமணி (வயது 70) உடல் நலக்குறைவால் கடந்த 14-ம்தேதி மரணம் அடைந்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.


இந்நிலையில், விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியை காலியானதாக சட்டப்பேரவை செயலாளர் அறிவித்துள்ளார். ஏற்கனவே நாங்குநேரி எம்எல்ஏ எச்.வசந்தகுமார், பதவியை ராஜினாமா செய்ததால் அந்த தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்பட்டது.


இதன்மூலம், 234 தொகுதிகள் கொண்ட சட்டமன்றத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கை 232 ஆக குறைந்துள்ளது. எம்எல்ஏ ராதாமணி மறைவையடுத்து தமிழக சட்டப்பேரவையில் திமுகவின் பலம் 100 ஆக குறைந்துள்ளது.


Previous Post Next Post