அங்கோர்வாட் கோவில் கட்டிய இரண்டாம் சூர்யவர்மன்


அங்கோர் வாட், சியம் ரீப்பின் நவீன நகரத்தின் வடக்கே 5.5 கிலோமீட்டர் தொலைவில், முந்தைய தலைநகரமான பாஃபுஆனுக்கு சற்றே தென் கிழக்கில் அமைந்துள்ளது. இக்கோவிலின் தொடக்க வடிவமைப்பும், கட்டுமானமும் 12ஆம் நூற்றாண்டின் பாதியில் இரண்டாம் சூரியவர்மனால் [3] ஆரம்பிக்கப்பட்டது. இக்கோயில் விஷ்ணுவுக்காக அர்ப்பணிக்க பட்டிருந்தாலும் அரசனின் மாநிலக்கோவிலாகவும், தலைநகரமாகவும் செயல்பட்டு வந்தது. இக்கோயிலின் உண்மையான பெயர் தெரியவில்லை. இரண்டாம் சூரியவர்மனின் மறைவுக்கு பின்னரே இக்கோயில் முழுத்தோற்றம் பெற்றது. 1177ல் தோராயமாக இரண்டாம் சூரியவர்மன் மறைந்து 27 வருடங்களுக்கு பின், அங்கோரை கெமரின் பாரம்பரிய எதிரிகளான சம்ப்பாக்கள் கைபற்றினர். அதன் பின்னர் புதிய அரசர் ஏழாம் ஜயவர்மன் சிறிது தூரம் வடக்கே தள்ளி தன் புதிய தலைநகரத்தையும், மாநில கோவிலையும் நிறுவினார். 13ஆம் நூற்றாண்டின் போது, அங்கோர் வாட், இந்து கோவிலில் இருந்து தேராவத புத்த மத பயன்பாட்டுக்காக இன்று வரை பயன்படுத்தப்பட்டு வருகிறது. அங்கோர் வாட், அங்கோர் கோயில்களிலேயே மிகவும் அசாதாரணமானது, 16ஆம் நூற்றாண்டிலேயே அக்கோயில் ஒரளவு புறக்கணிக்கப்பட்டு வந்தாலும் முழுமையாக கைவிடப்படவில்லை, ஏனெனில், அக்கோயிலின் அகழி காட்டின் அத்துமீறலில் இருந்து சிறிது பாதுகாப்பளித்தது.
மேற்கத்திய பார்வையாளர்கள் இக்கோயில் கெமர் மக்களால் கட்டப்பட்டது என்பதை நம்ப இயலாமல் இக்கோயில் உரோம சகாப்தத்தின் போதே கட்டப்பட்டது எனத் தவறாக தேதியிட்டனர். ஆனால், அக்கோயிலைப் புதுப்பித்த போது மேற்கொள்ளப்பட்ட கல்வெட்டுகளின் ஆய்வில் அது மற்ற அங்கோர்களிருந்து தனித்து இருப்பதை உணர்ந்தனர். 20ஆம் நூற்றாண்டின் போது தொடங்கப்பட்ட புதுப்பித்தல் பணி, உள்நாட்டுப் போர் மற்றும் 1970, 1980களின் கெமர் ரூச்சின் ஆட்சியினால் நிறுத்தப்பட்டது. ஆனால் மற்ற அங்கோரியன் சிலை திருட்டு மற்றும் சேதத்தை ஒப்பிடும் போது அங்கோர் வாட்டின் சேதம் குறைவே.


- தகவல்


அங்கோர் தமிழ் சங்கம் கம்போடியா🇰🇭
திரு. இரமேஷ் வாரன்
துணைத் தலைவர்


Previous Post Next Post