நிபா பீதி : மேலும் ஒருவர் ஜிப்மரில் அனுமதி

காட்டுமன்னார்கோவில் பகுதியை சேர்ந்த மேலும் ஒருவர் நிபா வைரஸ் தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிபட்டுள்ளார்.


கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் மேலபூவிழுந்தநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். இவர் கேரளாவில் பணியாற்றி வருகின்றார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சொந்த ஊருக்கு வந்த அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நேற்று காலை அவர் மீண்டும் காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அவரது காய்ச்சல் என்னவென்று அறியமுடியாததால் அவருக்கு நிபா தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படியில் அவர் இன்று ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்க அறிவுறுத்தினர்.


அதன் அடிப்படையில் அவர் நேற்று இரவு ஜிப்மர் மருத்துவமனையில் உள்ள தனி பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து அவரது ரத்த மாதிரிகள், சிறுநீர் சேகரிக்கப்பட்டு புனே மத்திய சோதனை கூடத்திற்கு அனுப்பப்பட உள்ளது. சோதனை முடிவில் அவருக்கு நிபா வைரஸ் உள்ளதா என உறுதிப்படுத்தப்படவுள்ளது.