அடுத்24 மணி நேரத்தில் வெயில் கொளுத்தும் !

சென்னை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு இயல்பை விட வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இதுகுறித்து,  வெப்பச்சலனம் காரணமாகவும் தென்மேற்கு பருவ மழையின் தாக்கம் காரணமாகவும் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெப்ப நிலையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தின் வடக்கு மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இயல்பை விட 4 முதல் 6 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும் என்றும் அனல் காற்று வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்கலாம் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத் துடன் காணப்படும் என்றும் அதிகபட்சமாக 41 டிகிரி செல்சியசும் குறைந்தபட்சமாக 31 டிகிரி செல்சியசும் பதிவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.