உலக இசை தினம் -இசைப் போட்டிகள்

உலக இசை தினம் ஜீன்-21 ஆம் தேதி கொண்டாடப்படுவதால், தமிழகத்தில் இத்தினத்தினை சிறப்பாக கொண்டாடும் வகையிலும், சென்னை மாவட்ட அளவிலான உலக இசை தினவிழா இசைப் போட்டிகள் 19.06.2019 அன்று காலை 10.00 மணி அளவில் சென்னை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் நடைபெறவுள்ளது. உலக இசை தினவிழா போட்டிகள் 15 வயது முதல் 30 வயதிற்குட்பட்டவர்களிடையே 1. தமிழிசை போட்டி, 2. கிராமிய பாடல் போட்டி, 3. முதன்மை கருவியிசைப் போட்டி ( நாதஸ்வரம், வீணை, வயலின், புல்லாங்குழல், மாண்டலின், கோட்டுவாத்தியம், சாக்ஸபோன், கிளாரிநெட் போன்றவை) 4. தாள கருவியிசை போட்டி (மிருதங்கம், தவில், கடம், கஞ்சிரா, மோர்சிங் போன்றவை) என நான்கு வகை பிரிவுகளில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் தமிழில் அமைந்த பாடல்கள் மட்டுமே பாடவோ / இசைக்கவோ வேண்டும். போட்டியாளர்கள் தங்களுக்கு தேவையான இசைக் கருவிகளை அவரவர் கொண்டு வருதல் வேண்டும். போட்டியில் வெற்றி பெறுவர்களுக்கு முதல் பரிசாக ரூ.3,000/-, இரண்டாம் பரிசாக ரூ.2,000/-, மூன்றாம் பரிசு ரூ.1000/- என நான்கு வகையிலான போட்டிகளுக்கும் பரிசுகள் வழங்கப்படும். மேலும் பங்குபெறும் அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும். மேலும் இசைப்போட்டிகள் குறித்த விவரங்களை, சென்னை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியின் தொலைபேசியில் அறிந்து கொள்ளலாம். தொலைபேசி எண். 044-24937217.


Previous Post Next Post