குழந்தைகளை தூங்க வைத்து விட்டு கணவனை தீர்த்துக்கட்டிய மனைவி - நெஞ்சம் பதற வைக்கும் வீடியோ காட்சி


சென்னை நெற்குன்றம், சக்தி நகர் 24 வது தெருவை சேர்ந்தவர் நாகராஜ் என்ற சுனில், இவரது மனைவி காயத்ரி. நாகராஜ் ஒரு ஆட்டோ டிரைவர். குடிப்பழக்கம் இருந்ததால் நாகராஜுக்கும் மனைவி காயத்திரிக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுத்துவது வழக்கம். 
நாகராஜ் மற்றும் அதே பகுதியை சேர்ந்த இன்னொரு ஆட்டோ டிரைவரான மகேந்திரன் ஆகிய இருவரும் நண்பர்கள். நாகராஜின் மனைவி காயத்திரியும், மகேந்திரனின் மனைவி பானுவும் தோழிகளாக இருந்தனர்.
இந்த நிலையில் மகேந்திரனுக்கு காயத்திரியுடன் கள்ளக்காதல் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் நாகராஜ் மகேந்திரனை கொன்று விடுவேன் என்று நண்பர்களிடம் கூறியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக 
இதையடுத்து 2 நாட்களுக்கு முன், காயத்திரி, பானு இருவரும் சேர்ந்து நாகராஜை கொல்ல முடிவு செய்துள்ளனர். போதையில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த நாகராஜை, அவரது மனைவி காயத்திரி துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்தார். இந்த காட்சியை அவரது தோழி வீடியோ எடுத்துள்ளார். அந்த பதைபதைக்க செய்யும் வீடியோ காட்சியில் காயத்திரி தனது கணவன் நாகராஜை, அவர் மீது ஏறி உட்கார்ந்து துப்பட்டாவால் கழுத்தை இறுக்குகிறார். அப்போது நாகராஜ் துடித்து இறக்கிறார். குழந்தைகள் தூங்கும் நேரத்தில் இந்த சம்பவம் அரங்கேற, சர்வசாதாரணமாக கொலையை செய்து விட்டு இறங்குகிறார் காயத்திரி. கொலையை செய்து விட்டு எஸ்கேப் ஆன நிலையில், கோயம்பேடு போலீசார் காயத்திரி, பானு இருவரையும் கைது செய்து விட்டனர். மகேந்திரனை தேடி வருகின்றனர்.


வீடியோ இணைப்பு: https://youtu.be/CeLszRTn_zg