திருப்பதி சென்று விட்டு வரும்போது சோகம்: அரசு பஸ் மோதி சென்னையை சேர்ந்த 4 பேர் பலி

சென்னை நங்கல்லூரை சேர்ந்தவர் முனி கிருஷ்ணா. இவர் தன்னுடைய குடும்பத்தினருடன் திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை தரிசனம் செய்துவிட்டு தங்களுடைய காரில் நள்ளிரவில் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.  ஆந்திர மாநிலத்தின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள நகரிக்கு அருகே கன்னமெட்டு என்ற பகுதி உள்ளது. அந்த  இடத்தில் பகுதியில் அந்த பகுதியில் முனி கிருஷ்ணாவின் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது தமிழக அரசு  பேருந்து ஒன்று திருப்பதி நோக்கி சென்று கொண்டிருந்தது.காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து திருப்பதிக்கு சென்று கொண்டிருந்த அந்த அரசு பேருந்து எதிரில் வந்து கொண்டிருந்த முனி கிருஷ்ணாவின் காரின் மீது பலத்த வேகத்தில் மோதியது. இதில் முனி கிருஷ்ணா, குமார் உள்ளிட்ட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.


பலத்த காயம் அடைந்த பயணிகள் சிலரை அருகில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதில் இரு பெண்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. நகரி போலீஸார் இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பதி சென்று விட்டு திரும்பி வரும்போது 4 பேர் பலியான சம்பவம் சோகததை ஏற்படுத்தி உள்ளது.