500 மருத்துவர்கள் விரைவில் நியமனம் - அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சாமி தரிசனம் செய்தார்..


 இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில்,


 தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் 500 மருத்துவர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என்றும்,


தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 210 கோடி ரூபாயில் தாய் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்றும் 


திருவண்ணாமலை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் தனியாக குடிநீர் திட்டம் ஏற்படுத்தப்படும் என்றும்  திருவண்ணாமலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.