தூத்துக்குடி பனிமய மாதா பவனி ஆகஸ்ட் 5ம் தேதி நடக்கிறது

தூத்துக்குடியில்  உலக பிரசித்தி பெற்ற பனிமய மாதா ஆலய திருவிழா பிளாஸ்டிக் இல்லாத திருவிழாவாக கொண்டாடப்படும் என ஆலய பங்கு தந்தை குமார் ராஜா கூறியுள்ளார். திருவிழா குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், திருவிழா வரும் 26 ஆம் தேதி தேதி கொடியேற்றத்துடன் தொடங்கஉள்ளது. தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும்  இந்த திருவிழாவில் ஜாதி, மத வேறுபாடு இன்றி லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்வர்கள். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மாதாவின் திருவுருவ பவனி மற்றும் கூட்டு திருப்பலி ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடைபெறும். அன்றைய தினம் தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.