வீரமாத்தியம்மன் திருக்கல்யாண விழா 









 திருப்பூர் பெரிச்சிபாளையத்தில் வீரமாத்தியம்மன் திருக்கோவில் உள்ளது. இந்த கோவிலில் சிலம்பாத்தாள், பெத்தாயம்மன் சாமிகளும், அவர்களுக்கு காவலாக கருப்பண்ணசாமியும் அருள்பாலிக்கிறார்கள். 
ஒவ்வொரு ஆண்டும் இந்த கோவிலில் திருக்கல்யாண விழா நடைபெறும். இதில் பல்வேரு ஊர்களில் இருந்து பக்தர்கள் திரளாக கலந்து கொள்வார்கள்.
 இந்த ஆண்டு திருக்கல்யாண விழாவையொட்டி, ஞாயிறன்று தாராபுரம் தில்லாபுரி அம்மன் கோவிலில் இருந்து தீர்த்தம் கொண்டு வரப்பட்டு அபிஷேக பூஜைகள் செய்யப்பட்டது.  திங்கள் கிழமை வெங்கக்கல் மேட்டில் இருந்து அரிசி மாற்றி, அம்மை அழைத்து வரப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. 
புதன்கிழமை காலையில் மீண்டும் ஹோம பூஜைகள் நடத்தப்பட்டது. அதை தொடர்ந்து முகூர்த்தக்கால் நடப்பட்டு, சிலம்பாத்தாள் திருக்கல்யாண நிகழ்ச்சியும் தீக்குழி பாயும், நிகழ்ச்சியும் நடைபெற்றது. 
இதில் மஞ்சள், பூவினால்  சாமி செய்யப்பட்டு, பாரம்பரியமாக பாதுகாத்து வரும் நகைகள் அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து பனை குருத்தோலை, வாழை மட்டையால் அலங்கரிக்கப்பட்ட மணவறையில் திருக்கல்யாண பூஜைகள் செய்யப்பட்டது. 
 இதையடுத்து, குதிரை மீது ஊர்வலமாக சாமி எடுத்து வரப்பட்டது. இந்த ஊர்வலத்தில் அதிர்வேட்டுகள் முழங்க திரளான பக்தர்கள் பங்கேற்றனர். ஊர்வலம் சிலம்பாத்தாள் குட்டைக்கு வந்தடைந்ததும் தீக்குழிபாயும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, அனைவருக்கும் மஞ்சள், பூ ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டது. 
விழா ஏற்பாடுகளை வீரமாத்தியம்மன் நற்பணி அமைப்பினர் சிறப்பாக செய்து இருந்தனர். விழாவையொட்டி, 3 நாட்களும் சிறப்பான விருந்து வழங்கப்பட்டது. தொடர்ந்து இரவு 7 மணிக்கு பெத்தாயம்மன் திருக்கல்யாணமும், தீக்குழி பாயும் நிகழ்ச்சியும் நடந்தது. 











 


 






 

 




 




 


 



 



Previous Post Next Post