திருப்பூர் எம்.பி.என்., எலெக்டரானிக்ஸ் கடையில் தீ விபத்து

திருப்பூர் மாநகராட்சி அருகே பாத்திரக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.

திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் அருகே பாலகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான பாத்திரக்கடை செயல்பட்டு வருகிறது.  இன்று மாலை கடைக்கு பின்புறம் இருந்த பாத்திர சேமிப்பு குடோனில் இருந்து புகை வெளியேறியது. இதனை கண்ட கடை ஊழியர்கள் உடனடியாக வெளியேறி தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர் தகவல் அறிந்து விரைந்து வந்த திருப்பூர் தெற்கு தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பாத்திரங்கள் எரிந்து சேதமானது திருப்பூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த தீ விபத்து காரணமாக திருப்பூர் காமராஜ் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டது.