தங்க நகைக்கு ஆடித்தள்ளுபடி: திருப்பூரில் அடிச்சு தூக்கும் நகைக் கடைக்காரர்கள்

 

 துணிக்கடைகளில் ஆடித் தள்ளுபடி வழங்கப்படுவதை போல, திருப்பூரில் உள்ள 200 நகை கடைகளிலும் தங்க நகைக்கு ஆடித்தள்ளுபடி வழங்கப்படும் என திருப்பூர் நகை வியாபாரிகள் சங்கத்தினர் அறிவித்து உள்ளனர்.

 

இது குறித்து திருப்பூர் நகை வியாபாரிகள் சங்க தலைவர் செந்தில்குமார், கார்த்திகேயன், பிரகாஷ், ராஜமாணிக்கம் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ' திருப்பூர் நகை வியாபாரிகள் சங்கம் சார்பில், பொதுமக்கள் ஆடிப்பெருக்கு விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று இந்த தள்ளுபடி அறிவித்து இருக்கிறோம். தங்க நகைகளுக்கு கிராமுக்கு 120 ரூபாயும், சவரனுக்கு 1000 ரூபாயும் தள்ளுபடி அளிக்கப்படும். ஆடி 18 வரை வழங்கப்படும் இந்த தள்ளுபடி விலையில்,  திருப்பூரில்  உள்ள 200 நகை கடைகளில் பொதுமக்கள் நகைகள் வாங்கலாம். தமிழ்நாட்டில் முதல்முறையாக வழங்கப்படும் இந்த தள்ளுபடி திருப்பூரில் மட்டுமே வழங்கப்படுகிறது. தள்ளுபடி காலத்தை நீடிப்பது குறித்து பொதுமக்கள் ஆதரவை பொறுத்து முடிவெடுக்கப்படும், என்றனர்.