தங்கை, சித்தியுடன் கள்ளக்காதல்: நேரில் பார்த்ததால் தம்பியையே தீர்த்துக்கட்டிய அண்ணன்

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே அயன்குஞ்சரம் கிராமத்தைச் சேர்ந்த கேசவன் மகன் சிவக்குமார் (வயது 15). இவர் எலவனாசூர் கோட்டை அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில், கடந்த ஜூலை 28-ம் தேதி சிவக்குமார் வீட்டை விட்டு வெளியே விளையாட சென்றவர், அப்படியே காணாமல் போனார். அவரது தாய் ஆதிபராசக்தி மற்றும் மாணவனின் உடன்பிறந்த அண்ணன்  சரத்குமார், உடன்பிறந்த அக்கா செளந்தர்யா உடன் படித்த மாணவர்கள் சிவக்குமாரை தேடிப்பார்த்தும்  கிடைக்கவில்லை. 
இந்த நிலையில் சிவக்குமாரின் அண்ணன் சரத்குமார் கொடுத்த தகவலின் அடிப்படையில், அங்குள்ள காட்டுப்பகுதியில்  கழுத்து அறுக்கப்பட்டு படுகொலை செய்து பிணமாக கிடந்த  மாணவன் சிவக்குமாரின் உடலை போலீசார் மீட்டனர்.
மாணவணின் பிரேதத்தை பார்த்த தாய் ஆதிபராசக்தி  அழுது புரண்டது பரிதாபமாக இருந்தது.
சம்பவ இடத்தில் மாவட்ட போலீஸ்  எஸ்பி ஜெயக்குமார், துணை கண்காணிப்பாளர்கள் பாலச்சந்தர், மகேஷ். இன்ஸ்பெக்டர் எழிலரசி,   உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்தை ஆய்வு செய்து விசாரணையை முடுக்கி விட்டனர்.
விசாரணை நடந்து வரும் நிலையில், சிவகுமாரின் உடன்பிறந்த அண்ணன் சரத்குமார் (வயது 21), என்பவர் குஞ்சரம் கிராம நிர்வாக அலுவலர் வெற்றிவேலிடம் நேரில் ஆஜராகி தனது தம்பி சிவக்குமாரை தானே கொலை செய்ததாக கூறி சரணடைந்தார். மேலும் தனது தங்கை செளந்தர்யா (வயது 19), எனது சித்தப்பா மனைவி புஷ்பா (வயது 30)  ஆகியோருடன் சேர்ந்து இந்த கொலையை செய்ததாக கூறி அதிர்ச்சி தகவல் அளித்தார்.
உடனே கிராம நிர்வாக அலுவலர் வெற்றிவேல் அவர்கள் எலவனாசூர் கோட்டை போலீசாருக்கு இந்த தகவலை தெரிவித்தனர்.
விரைந்து சென்ற போலீசார் சரத்குமாரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.


போலீசார் விசாரணையில், சரத்குமார் கூறிய வாக்குமூலம் போலீசாருக்கு கூட அதிர்ச்சி அளிப்பதாக இருந்துள்ளது.


 சரத்குமார்  தனது தந்தையின் உடன் பிறந்த தம்பி மனைவி( தனது சித்தி) புஷ்பா (வயது 30) என்பருடன் தகாத உறவில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்படி ஒருமுறை தனது சித்தியுடன் சரத்குமார் உல்லாசமாய் இருந்தபோது சிவக்குமார் பார்த்து விட்டதாகவும், , இதேபோன்று  தனது உடன்பிறந்த தங்கை சவுந்தர்யாவிடமும் சரத்குமார் தகாத உறவில் ஈடுபட்டு வந்துள்ளார். சவுந்தர்யா உடன் சரத்குமார் உல்லாசமாக இருந்ததையும் சிவக்குமார் நேரில் பார்த்து உள்ளார். இதனால் சரத்குமார், அவரது சித்தி புஷ்பா, தங்கை சவுந்தர்யா ஆகிய 3 பேரும் சேர்ந்து சிவக்கு மாரை கொலை செய்ய திட்டம் தீட்டி உள்ளனர்.
இந்த மாபாதக கொலை திட்டத்தை எப்படி செய்தார்கள் என்று சரத்குமார் தொடர்ச்சியாக அளித்த வாக்குமூலம் போலீசாரை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
சரத்குமார் போலீசாரிடம் கூறிய வாக்குமூலத்தின் விவரம்:  எனது தம்பி சிவக்குமார், பள்ளி விடுமுறை நாட்களில் அருகில் உள்ள காப்புக் காட்டிற்குச் சென்று, காடை, கவுதாரி, முயல் உடும்பு உள்ளிட்டவற்றை வலைவைத்து பிடித்து வருவது வழக்கம்.  சம்பவத்தன்று ஞாயிற்றுக்கிழமை  விடுமுறையானதால், எனது தம்பியை தந்திரமாக உடும்பு பிடிக்கலாம் என்று கூறி காப்புக் காட்டிற்கு அழைத்துச் சென்றேன். அதற்கு முன்பாகவே எனது கள்ளக்காதலி (சித்தி) புஷ்பா, தங்கை சவுந்தர்யா ஆகியோரை காப்புக் காட்டுக்கு மாலை சுமார் மூன்று மணி அளவிற்கு வரவைத்துவிட்டு, எனது தம்பியை உடும்பு பிடிப்பது போல் காப்பு காட்டிற்குள் அழைத்து சென்றேன். அப்போது ஒரு பாறையின் அடியில் முள்புதரில் எனது உடும்பு இருப்பதாகவும், உடும்பின் கால் தடம் தெரியுதா என்று குனிந்து பார் என கூறினேன். எனது தம்பி சிவக்குமார், எங்களது திட்டத்தை அறியாமல் பாறையின் கீழே குனிந்து உடும்பை தேடினான். அப்போது என்னிடம் இருந்த கொடுவாளால் எனது தம்பி சிவக்குமாரின் கழுத்தை  அறுத்தேன். அவன் திமிறி எழுந்தபோது, அங்கு ஏற்கனவே மறைந்து இருந்த எனது சித்தி புஷ்பா, தங்கை சவுந்தர்யா ஆகிய இருவரும் எனது தம்பியை, அமுக்கி பிடித்துக் கொண்டனர்.நான் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு, பிணத்தை அதே இடத்தில் போட்டு விட்டு, சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் கொலை செய்ய பயன்படித்திய கொடுவாளை காட்டுக்குள் வேறு இடத்தில் போட்டுவிட்டு யாருக்கும் தெரியாமல் வீட்டிற்கு சென்றோம். என் அம்மா உடன் சேர்ந்து நாங்களும் தேடுவது போல் நாடகம் ஆடினோம். என்று நெஞ்சம் பதற வைக்கும் இந்த கொலை சம்பவத்தை  போலீசாரிடம் கூறி உள்ளார் சரத்குமார்.   இதையடுத்து கொலைசெய்யப்பட்ட சிவக்குமாரின் உடன்பிறந்த அண்ணன்   சரத்குமார், உடன்பிறந்த சகோதரி சவுந்தர்யா, தனது தந்தையின் உடன்பிறந்த தம்பி மனைவி (சித்தி) புஷ்பா, ஆகியோரை கொலை வழக்கில் கைது செய்த போலீசார் உளுந்தூர்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 
தங்கை, சித்தி என தனது குடும்பத்துக்குள் தகாத உறவு வளர்த்த சரத்குமார், தனது தம்பியையே கொலை செய்ததும், அதற்கு உடந்தையாக சகோதரியும், சித்தியும் இருந்துள்ளது என்பது நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு அதிர்ச்சி கரமாகவும், அருவருக்கத் தக்கத்தாகவும் உள்ளது.