திருப்பூர்: மறியல் செய்ய பஸ் முன் உருண்டு புரண்ட பெண்

 


 


 


 


 


 


 


 


 


 


திருப்பூரில் மறியல் செய்வதற்காக  பஸ் முன்புறம் உருண்டு புரண்ட பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது


திருப்பூர் அருகே நாச்சிபாளையம் கிராம மக்கள் 3 மாத காலமாக குடிநீர் வழங்காததை கண்டித்து  சீரான குடிநீர் வழங்க  கேட்டு காங்கேயம் சாலையில்  காலி குடங்களுடன் மறியல் போராட்டம்.


ரெங்கபாளையம், வண்ணாந்துறை புதூர், புளியாண்டம்பாளையம், வெள்ளி மலை, ஏரிப்பாளையம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு .


திருப்பூர், பொங்கலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட 
ரெங்கபாளையம், வண்ணாந்துறை புதூர், புளியாண்டம்பாளையம், வெள்ளி மலை, ஏரிப்பாளையம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில்  5000 -க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இப் பகுதிகளில் கடந்த 3 மாத  காலமாக குடிநீர் வழங்கவில்லை, குடிநீர் சீராக வழங்ககோரியும், பல இடங்களில் குடிநீர் வசதி இல்லாமல் உள்ள பகுதிகளில் குடிநீர் வசதி செய்து தர கோரியும்  பல முறை விண்ணப்பித்தும் இதுவரை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினாலும் ,
இப்பகுதியில் உள்ள குளம், குட்டைகளுக்கு பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன திட்டத்திற்கு திறந்து விடும் நீரானது கடை மடை வரை வருவதில்லை , இதனால் இப்பகுதியில் உள்ள தென்னை விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அரசு உடனடியாக சீரான குடிநீர் வழங்க கேட்டும்,குடிநீர் வசதி ஏற்படுத்தி தர கோரியும், வாய்க்கால் தண்ணீரை கடை மடை வரை கிடைக்க நடவடிக்கை எடுக்க கோரியும் 300-க்கும் மேற்பட்ட மக்கள் காங்கேயம் சாலையில் காலி குடங்களுடன் அமர்ந்து போராட்டம் நடத்தினர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் அரசு பேருந்தின் சக்கரத்தின் அடியில் படுத்து  அரசு உடனடியாக குடிநீர் வழங்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டார்.இதனால் காங்கேயம் - திருப்பூர் சாலையில் 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் சாலை மறியல் செய்து வரும் தகவல் அறிந்ததும் அவினாசிபாளையம் போலீசார் வருகை தந்து குடிநீர் வாரிய அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து குடிநீர் சீராக விநியோகிக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Previous Post Next Post