தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 26.07.2019 அன்று காலை 10.30 மணிக்கு  பல்லடம் சாலையில் உள்ள மாவட்ட ஆட்சியார்  வளாகதில் 4வது தளம் அறை எண் 439, ல் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது. 


தனியார் துறையை சார்ந்தவர்கள் தங்களுக்கு தேவையான தகுதியுள்ளவர்களை தேர்வு செய்ய உள்ளனர். வேலை தேடுபவார்கள் தங்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை மற்றும் சுயதகவல் படிவத்துடன் கலந்து கொள்ளலாம். எழுதப் படிக்கத் தொரிந்தவார்கள் முதல் முதுநிலை பட்டதாரிகள் வரை ஐ.டி.ஐ, டிப்ளமோ படித்தவர்கள் மற்றும் தையல் பயிற்சி பெற்றவார்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். அன்று நடைபெறும் வேலை வாய்ப்பு முகாமிற்கு வரும்பொழுது தங்களது பதிவில் குறைகள் கண்டறியப்பட்டால், அதனை சரி செய்து கொள்ளலாம். புதுப்பித்துக் கொள்ளலாம். கூடுதல் கல்வி தகுதி இருப்பின் பதிவு செய்து கொள்ளலாம். தகுதியிருப்பின் வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை விண்ணப்பம் பெற்று உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்  தனியார் துறைகளில் வேலையில் சேருவதால் தங்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் இரத்து செய்யப்படமாட்டாது. அனைவரும் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் இவ்வாறு மாவட்ட ஆட்சியா கே.எஸ்.பழனிசாமி தெரிவித்தார் .