அத்திவரதரை திமுகவினர் அதிகமாக தரிசனம் செய்கிறார்கள் - தமிழிசை தூத்துக்குடியில் பேட்டி

 


தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழிசை சவுந்தரராஜன், 'பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு  பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களிக்காத மக்கள்  வருத்தப்படுகிறார்கள். பாரதிய ஜனதா கட்சியில் அதிக அளவில் ஆர்வத்துடன் மக்கள் சேர்ந்து வருகிறார்கள் என்ற அவர். பாரதிய ஜனதா  கட்சி இரண்டாவது முறையாக ஆட்சி பொறுப்புக்கு வந்தது முதல் 50 நாட்களில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் குறித்து பட்டியலை பெருமையுடன் வெளியிட்டுள்ளது. மத்திய அரசு இந்தியை திணிக்கும் எண்ணத்தில் ஒருபோதும் இல்லை, அதிகாரிகள் செய்த தவறால் அஞ்சல் துறை, ரயில்வே துறையில் சில தவறுகள் நடந்து விட்டது என கூறிய அவர்,  அவ்வாறு இந்தியை திணிக்கும் நிலை ஏற்பட்டால்  தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி அதற்கு எதிராக  அரசிடம் குரல் கொடுக்கும் என்றார். கஸ்தூரிரங்கன் தலைமையில் 1976 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட புதிய கல்விக் கொள்கை கல்விக் கொள்கையில் பல்வேறு ஆசிரியர்கள் பெற்றோர்கள் பேராசிரியர்கள் என பல பேர் கொண்ட குழுவினர் ஆராய்ச்சி செய்து புதிய கல்விக் கொள்கையை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கல்விக் கொள்கை வெளி மாநிலத்தில் மட்டும் அட்டை வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவ மாணவிகளுடன் நமது மாணவர்கள் போர் சவால் விடும் வகையில் அமைந்துள்ளது எனவே இந்த கல்விக் கொள்கையை மாற்றியமைக்க கோரி இத்திட்டத்தில் அரசியலை புகுத்தாதீர்கள் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். தமிழகத்திற்கு தேவையான பல்வேறு ரயில் திட்டங்கள் தொடர்ந்து கொண்டு வருவதற்கு பாரதிய ஜனதா கட்சி மத்திய அரசிடம் வலியுறுத்துவோம் என்று அவர் கூறினார். காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்க திமுகவினர் அதிக அளவில் செல்கின்றனர் திமுகவினர் அதிக பாவம் செய்தார்களா என்று தெரியவில்லை ஸ்டாலின் சென்றால் கூட அச்சரியபட ஒன்றுமில்லை.புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மோட்டார் வாகன சட்டம் விபத்துக்களை தடுக்கும் வகையில் மக்களை பாதுகாக்கும்  வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது, இதில் மாநில உரிமைகள் எந்த அளவுக்கும் பறிக்கப்படாது . இவ்வாறு அவர் பேட்டியளித்தார்.


Previous Post Next Post