திருப்பூரில் மரக்கன்றுகள் நடும் விழா

திருப்பூர் வனம் இந்தியா மற்றும் வனத்துக்குள் திருப்பூர் அமைப்பு சார்பாக 200 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இதை திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் சு.குணசேகரன்   துவக்கி வைத்தார்.

 

  திருப்பூர் கே.வி.ஆர் நகர், கருவம்பாளையம் பகுதியில் வனம் இந்தியா மற்றும் வனத்துக்குள் திருப்பூர் சார்பில் 200 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இந்த விழாவின் சிறப்பு விருந்தினராக திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர்  சு.குணசேகரன் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டு துவக்கி வைத்தார்.விழாவுக்கு வனத்துக்குள் திருப்பூர் ஒருங்கிணைப்பாளர் கிளாசிக் சிவராமன், போலீஸ் உதவி கமிஷனர் நவீன்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் கவுன்சிலர் அன்பக்கம் திருப்பதி வரவேற்றார். இந்த விழாவில், சண்முகசுந்தரம், நர்மதா டையிங் சுப்பிரமணி, கே.டி.சி., பள்ளி நாராயணமூர்த்தி, ஓ.கே.கந்தசாமி, மனோஜ், பி.ஈஸ்வரன், எம்.எஸ். பழனிசாமி, சுரேந்திரன், பக்தவச்சலம், சிவபாலன், குமாரவடிவேல், ஈஸ்வரமூர்த்தி, குணசேகரன்,அசோக் குமார், மகேஸ்வரி, செந்தில்குமார் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.  விழாவில் எம்.எல்.ஏ.,சு.குணசேகரன் பேசும்போது கூறியதாவது:

மரக்கன்றுகளை நட்டால் மட்டும் போதாது 10 மரக்கன்றுகளுக்கு ஒரு ஆளை நியமித்து அதை பராமரிக்க வேண்டும், இதற்கு அதிமுக கட்சி சார்பில் தொண்டர்கள் கட்டாயம் ஒத்துழைப்பு கொடுப்பார்கள். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் "மக்களால் நான் மக்களுக்காகவே நான்" என்ற வேதவாக்கை அவரின் தொண்டர்களாகிய நாம் கடைபிடித்து அவர் வார்த்தைகளுக்கு பெருமை சேர்க்கும் வகையில் இதை நாம் செய்திட வேண்டும். அதேபோல் தமிழக முதல்வர் அவர்கள் இதுவரை யாராலும் செய்து முடிக்கமுடியாத நெகிழி பிரச்சினையை இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் நெகிழி இல்லாத மாநிலமாக உருவாக்கியுள்ளார்,  அன்றே தொலைநோக்குப் பார்வையோடு சிந்தித்ததால் தான் மழைநீர் சேகரிப்பு குறித்து அம்மா அவர்கள் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை உருவாக்கினார். அந்தத் திட்டத்தை மக்களாகிய நாம் அனைவரும் மறந்து விட்டோம், மீண்டும் தண்ணீர் தட்டுப்பாடு வரும்போது தான் மழைநீரை பற்றி நாம் சிந்திக்கிறோம். அரசு பல கோணங்களில் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது, மழைநீர் சேகரிப்பு மக்களாகிய நாம் மழை நீரின் மகத்துவத்தை உணர்ந்து நாம் அதை கடைபிடிக்க வேண்டும் என்று விழாவில் திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர்  சு.குணசேகரன் பேசினார். பேசினார். இந்த விழாவில்  இனிப்புகள் வழங்கி அனைவரும் மரங்களை நட்டு விழாவை சிறப்பித்தனர். இதில் பொன் மருதாச்சலம், சலவை மணி, வாசிமலை டெய்லர் குருசாமி, மருதையப்பன், திருநகர் சாமிநாதன், பிரிண்டிங் நாகராஜ்,  மேடை முத்தையா உள்பட பலர் பங்கேற்றனர்.