பூமிப் பந்தை புரிந்து கொள்வோம்

சுப்ரீம் மொபைல்ஸ், தமிழ்ப் பண்பாட்டு மையம், அரிமா சங்கம் இணைந்து நடத்திய பூமிப் பந்தை புரிந்து கொள்வோம் எனும் தலைப்பில் ஒரு நாள் பயிற்சி முகாம் நிகழ்வு  குமரன் சாலையில் உள்ள அரிமா சங்க அரங்கத்தில் நடைபெற்றது. சுப்ரீம் மொபைல்ஸ் நிர்வாக இயக்குநர் ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார். அரிமா சங்க தலைவர் VAR.செந்தில்குமார் வரவேற்றார். தமிழ்ப் பண்பாட்டு மைய ஒருங்கிணைப்பாளர் யோகி செந்தில் ஒருங்கிணைத்து நடத்தினார். இப் பயிற்சி வகுப்பில்  4-ம் வகுப்பிற்கு மேல் பயிலும் மாணவ, மாணவியர்க்கு  மதுரையைச் சேர்ந்த ஆசிரியர் சிவக்குமார் கலந்து கொண்டு சிறப்புப் பயிற்சி வழங்கினார். பூமியின் வடிவம், வடிவம் கண்டறியப்பட்ட விதம்,நில நடுக் கோடு,அட்சக் கோடு,தீர்க்க கோடு,ஆர்க்டிக் வட்டம்,கடகக் கோட்டு வட்டம்,மகரக் கோட்டு வட்டம்,அண்டார்டிக் வட்டம் எனும் கற்பனைக் கோடுகள் ஏன் வரையப்பட்டுள்ளன, அவற்றின் அளவுகள், துருவங்களின் வானிலை குறித்து விளக்கமளிக்கப்பட்டது. மேலும் நேரம் கணக்கிடும் முறை, நேரங்கள் எவ்வாறு நாடுகளுக்கிடையில் மாறுபடுகிறது காலம் என்பது சமமா, பூமியின் நடுப்பகுதி எவ்வாறு கணக்கிடப்படுகிறது, தேசத்தின் வரைபடங்களுக்கும் பூமி உருண்டைக்கும் உள்ள வேறுபாடுகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. 70,000 வருட மனிதர்களின் நகர்வையும், உணவுத் தேடலையைும், சூழலியைலையும் , உயிரினங்களின் ,புவியின் மாற்றங்கள், மற்றும் நமது இடத்தின் அட்ச, தீர்க்காம்சங்களை செயல்முறையாக நாமே எப்படி கண்டுபிடிப்பது போன்ற பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இந்நிகழ்வில் 75 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள்  பங்கேற்றனர்.