திட்டக்குடியில் கிருஷ்ண ஜெயந்தி விழா


 


திட்டக்குடியில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு பாசார் பெருமாள் கோவிலில் உறியடி மற்றும் வழுக்கு மரம் ஏறுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.


திட்டக்குடி அடுத்த பாசார் பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. திருமஞ்சனம் ஸ்ரீகிருஷ்ணருக்கு சங்கு, பால் ,பூஜை, ஊஞ்சல் உற்சவம் வீரராகவ பெருமாளுக்கு திருமஞ்சனம் நடந்தது. மாலை உரியடித்தல் மற்றும் வழுக்கு மரம் ஏறுதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து சாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தது. இதில் கிராம முக்கியஸ்தர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.