உளவுப் பிரிவு தகவல் : தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறையினர் உஷார்


 


உளவுப் பிரிவு தகவலை அடுத்து தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்


மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் தலைமையில் பாதுகாப்பு மற்றும் ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது


உளவுப்பிரிவு தகவலையடுத்து நேற்று இரவு முதல் (22. 08. 2019) தூத்துக்குடி மாவட்டத்தில் செய்துங்கநல்லூர், புதுக்கோட்டை, புதூர் பாண்டியபுரம், சவலாப்பேரி கயத்தாறு, கோடங்கிபட்டி ஆகிய இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு காவல் ஆய்வாளர்கள் மேற்பார்வையில் உதவி ஆய்வாளர்கள் காவலர்கள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்



 


மேற்படி 6 சோதனை சாவடிகளில் வாகனங்களில் சந்தேகத்திற்கிடமான வகையில் யாரும் செல்கின்றனரா, ஆயுதங்கள் போன்ற சட்டவிரோதமான பொருட்கள் கொண்டு செல்கின்றனரா என சுமார் 1500க்கும் மேற்பட்ட வாகனங்களை போலீசார் சோதனை செய்துள்ளனர். தொடர்ந்து வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர்


அதேபோன்று தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து உட் கோட்டங்களிலும் அந்தந்த காவல் துணை கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர்கள் 112 தங்கும் விடுதிகளை சோதனையிட்டு தங்கியுள்ளவர்களின் விவரங்களையும் சேகரித்து சந்தேகத்திற்கிடமான நபர்கள் தங்கி உள்ளனரா எனவும் விசாரணை செய்து சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்


தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் உதவி ஆய்வாளர்கள் தலைமையில் காவல்துறையினர் அந்தந்த பகுதிகளில் வாகன தணிக்கை செய்து மோட்டார் வாகன சட்டப்படி குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், ஆகியவை உட்பட 712 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.


கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட 114 எதிரிகளை தணிக்கை செய்து அதில் 6 எதிரிகளையும் சேர்த்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 41 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் வழக்குகளில் வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட 2 எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்


தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பல வழக்குகளில் சம்பந்தப்பட்ட 123 முன்னாள் குற்றவாளிகள் செயல்பாடுகளை கண்காணிக்கும் வகையில் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது


திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சாமி கோயிலுக்கு வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் இரவு நேரத்தில் தூரத்தில் வருபவர்களை துல்லியமாகத் தெரிந்து கொள்ளக் கூடிய அளவிற்கு பைனாகுலர், மெட்டல் டிடெக்டர், கடற்கரையோரங்களில் வேகமாக செல்லக்கூடிய வாகனம், கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டு ஆயுதமேந்திய காவலர்கள் அடங்கிய காவல்துறையினர் பாதுகாப்பு சுழற்சி முறையில் 24 மணி நேரம் பணியில் ஈடுபடுத்தப்பட்டு சந்தேகப்படும் நபர்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்


இரவு நேரங்களில் கூடுதலான ரோந்து பணிகள் அமைக்கப்பட்டு, கடலோரப் பகுதிகளில் ஊடுருவலை தவிர்க்கும் பொருட்டு தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்


தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் எச்சரிக்கை விடுத்துள்ளார்


Previous Post Next Post