புதிய கல்விக் கொள்கையின் குறைகளை கலைய மத்திய அரசை வலியுறுத்தி திருப்பூரில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்


புதிய கல்விக் கொள்கையின் குறைகளை கலைய மத்திய அரசை வலியுறுத்தி திருப்பூரில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஆசிரியர்கள் ஈடுபட்டனர்.

புதிய கல்விக் கொள்கையில் கிராமப்புறம் மற்றும் ஏழை மாணவர்கள் பாதிக்க படுவார்கள். பத்து இருபது பள்ளிகளை இணைத்து ஒருங்கிணைந்த பள்ளியாக செயல்படும் திட்டத்தை கைவிட வலியுறுத்தியும் , 3 5 8ம் வகுப்புகளுக்கு தகுதி தேர்வு நடத்துவதை தவிர்க்கவும்,  பன்னிரண்டாம் வகுப்பு முடிந்தாலும் தேசிய நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற முறையையும் குலக்கல்வி திட்டம் கொண்டு வருவதை கைவிடுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் அதன் ஒரு பகுதியாக திருப்பூர் குமரன் சிலை முன்னதாகவும் திருப்பூர் தொடக்க கல்வி அலுவலகம் முன்பாகவும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியை சேர்ந்த ஆசிரியர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின்போது கல்விக் கொள்கையில் உள்ள சீர்கேடுகளை கலைந்து அனைத்து மாணவர்களுக்கும் நல்ல கல்வியை வழங்க வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் மாவட்ட தலைவர் துரை.தில்லையப்பன், மாவட்ட செயலாளர் ஜெயராஜ், மாநில துணை செயலாளர் நாகராஜ் கணேஷ்குமார், மாநில செயற்குழு உறுப்பினர் பார்த்திபன், பொது செயலாளர் ஆறுமுகம், மாவட்ட செயலாளர் ராமசாமி, மாவட்ட பொருளாளர் செல்வராஜ் மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்துகொண்டனர்.