திருப்பூரில் தமிழாற்றுப்படை நூல் அறிமுக விழா


திருப்பூரில் தமிழாற்றுப்படை நூல் அறிமுக விழா யுனிவரசல் தியேட்டர் ரோட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தலைமை உரை ராம்ராஜ் காட்டன் நிறுவனர் கே.ஆர்.நாகராஜன் நிகழ்த்தினார். அறிமுக உரை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், நன்றியுரை அரிமா எம்.ஜீவானந்தம் பேசினார். ஏற்புரையை வைரமுத்து நிகழ்த்தினார். நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர். நிகழ்வில் தமிழாற்றுப்படை புத்தகம் வாங்கிய அனைவருக்கும் வைரமுத்து கையெழுத்திட்டு வழங்கினார்.