நத்தம் அருகே கோபால்பட்டியில் பன்றிகளுக்கு விஷம் வைத்துக் கொன்ற மர்ம நபர்கள்


 

திண்டுக்கல் மாவட்டம், நத்தம்  அருகேயுள்ள கோபால்பட்டி காந்திநகர் பகுதியில் 20க்கும் மேற்பட்டோர் பன்றி வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர் பன்றி வளர்ப்பில் அதிக அளவில் பணம் மற்றும் பொருள் செலவு இல்லை மற்றும் நல்ல லாபம் கிடைப்பதால் பலர் இதில் ஈடுபட்டுள்ளனர். தொழில் போட்டி காரணமாக பன்றி வளர்ப்பு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருகிறது. காந்தி நகரை சேர்ந்த  குமார்(வயது35). இவர் நூற்றுக்கும் மேற்பட்ட பன்றி வளர்த்து வருகிறார். இவற்றில் சில பாறைப்பட்டி சாலையிலுள்ள பெரியகுளத்தில் மேய்ந்து விட்டு காலை வீட்டுக்கு வருவது வழக்கமாகும். இதன்படி நேற்று பன்றிகள் மேயச்சென்றுள்ளன. பன்றிகளை பட்டியில் அடைக்க ஏற்பாடு நடந்தபோது 15 பன்றிகளை காணாததைக் கண்டு  தேடி சென்றுள்ளனர்.  அப்பொழுது கோபால்பட்டி பேருந்து நிலையம் பின்புறம் உள்ள  குளத்தில் வாயில் நுரை தள்ளியபடி கீழே விழுந்து துடிதுடித்துள்ளன. இறந்து கிடந்தது. அதனைதொடர்ந்து 15க்கும் மேற்பட்ட பன்றிகள் இறந்து கிடப்பதை பார்த்து  குமார் மற்றும் அவரது குடும்பத்தினரும் பதறிப்போனார்கள். அவற்றை சோதனை செய்து பார்த்தபோது பன்றிகளுக்கு விஷம் வைத்து கொன்றது தெரியவந்தது இதேபோல் பகுதியை சேர்ந்த கணேசன், சரவணன் உள்ளிட்டவர்களின் 7 பன்றிகளும் விஷம் வைத்துக் கொள்ளப்பட்டது தெரியவந்தது. ஒரே நாளில் 22 பன்றிகள் விஷம் கொடுத்து கொன்றுள்ள சம்பவம் கோபால்பட்டியில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.இதுகுறித்து சாணார்பட்டி போலீசில் பன்றிகளை கொன்ற மர்மநபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி புகார் மனு அளித்தனர் .

Previous Post Next Post