நத்தத்தில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் உண்ணாவிரதப் போராட்டம்


 

திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் பணி நிரந்தரம், தினக்கூலி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் நத்தத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது . நத்தம் மின்சார வாரியத்தில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் ஒப்பந்த தொழிலாளிகள் பணியாற்றி வருகின்றனர். நத்தம் மின்சார வாரிய அலுவலகம் முன்பு  தமிழ்நாடு மின்சார வாரிய ஒப்பந்த தொழிலாளர் சங்க திண்டுக்கல் மாவட்ட தெற்கு கோட்ட செயலாளர் செல்வம் தலைமையில் 50க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் ரூபாய் 350 தின ஊழியம் ஆக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தை ஈடுபட்டனர்.