திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் 13 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்


 

திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 13 ஊராட்சிகளில், சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. திருப்பூரை ஒட்டி உள்ள மங்களம், காளிபாளையம், முதலிபாளையம், கணக்கம்பாளையம், ஈட்டிவீரம்பாளையம்,மேற்குபதி, பட்டம்பாளையம்,பெருமாநல்லூர், பொங்குபாளையம், சொக்கனூர், தொரவலூர், வள்ளிபுரம் ஆகிய ஊராட்சிகளில் திருப்பூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் வே.கனகராஜ் தலைமையில் நடந்த இந்த கிராம சபை கூட்டங்களில் 2800 பேர் கலந்து கொண்டனர். இந்த கூட்டங்களில் கிராம வளர்ச்சி குறித்து 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.  ஜல் சக்தி அபியான் திட்ட செல்போன் செயலியில் புகைப்படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டது. இதில் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், ஊராட்சி செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.