சேலம் விநாயகா மிஷன்ஸ் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி ஆண்டு விழா


சேலம் விநாயகா மிஷன்ஸ் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி ஆண்டு விழா வின்குலோரி  2019 வினாயக மிஷன்ஸ் கிருபானந்த வாரியார் மருத்துவ கல்லூரி வளாக அன்னபூர்ணா கலையரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் மருத்துவ கண்காணிப்பாளர் ஆசிரியர் ரத்தினசபாபதி வரவேற்புரை வழங்கினார். கல்லூரி முதல்வர் பேராசிரியர் நாகராஜன். ஆண்டு அறிக்கை வாசிக்க பல்கலைக்கழக இயக்குனர் ராமசாமி அவர்கள் தலைமையில் விநாயகா மிஷன்ஸ்  நிகர்நிலை பல்கலைக் கழக நிறுவனர்  அன்னபூரணி சண்முகசுந்தரம் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து உரிய ஆண்டு மலரை வெளியிட முதல் பிரதியை கழக பதிவாளர் அஞ்சலகம் படம் பேராசிரியர் ஜெயகர் அவர்கள் பெற்றுக்கொண்டார். பல்கலைக்கழகத் தேர்வில் முதல் இடம் பிடித்த மாணவ மாணவியர்களுக்கு சிறப்பு விருந்தினர் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.இவ்விழாவில் பல்கலைக்கழக முதுநிலை மேலாளர் பாலசுப்பிரமணியம் விநாயகா மிஷன்ஸ் கிருபானந்த வாரியார் மருத்துவ கல்லூரி பேராசிரியர் பிரகாசம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். விழாவில் சேர்மன் தங்கப்பதக்கம் பெற்ற முதல்நிலை மாணவர் மருத்துவர்  ஸ்டீவன் சன்ஸ் ஏற்புரை ஆற்றினார். இறுதியில் பயிற்சி மருத்துவர் விஷ்ணுபிரியா நன்றி உரையாற்றினார்.   இவ்விழாவில் கல்லூரி மருத்துவ பேராசிரியர்கள், மருத்துவர்கள், அலுவலர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்