மாவட்ட அளவிலான இரண்டாமாண்டு ஸ்டென்த் லிப்டிங் போட்டி- S.P. அருண் பாலகோபாலன், பரிசு வழங்கி பாராட்டு


தூத்துக்குடி மாவட்ட அளவிலான இரண்டாமாண்டு ஸ்டென்த் லிப்டிங் போட்டி : வெற்றி பெற்றவர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட S.P. அருண் பாலகோபாலன், பரிசு வழங்கி பாராட்டு. காரப்பேட்டை நாடார் பள்ளி வளாகத்தில் தூத்துக்குடி மாவட்ட அளவிலான இரண்டாமாண்டு ஸ்டென்த் லிப்டிங் போட்டி நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரி மற்றும் உடற்பயிற்சிக்கூட மாணவ, மாணவிகள் 250 பேர்  இப்போட்டியில் கலந்து கொண்டனர். இப்போட்டி ஏழு வகையான பிரிவுகளில் நடைபெற்றது  இப் போட்டியில் கலந்து கொண்டு முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்கள் வெற்றியாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்தப் பரிசளிப்பு விழாவில் கலந்து  கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் விளையாட்டு வீரர்களை ஊக்குவித்து சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில் "இப்போட்டியில் 30 சதவீத பெண்கள் கலந்து கொண்டுள்ளனர். இது போன்ற விளையாட்டுப் போட்டிகளில் பெண்கள் கலந்து கொள்வது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்தத் தருணத்தில் சாலைப் பாதுகாப்பு பற்றியும் எடுத்துரைக்க வேண்டியுள்ளது. இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் பின் இருக்கையில் அமர்ந்து செல்பவர்கள் அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும்.  அதே போன்று நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும். நீங்கள் அனைவரும் சாலை பாதுகாப்பு விதிகளை கடைப்பிடிப்பீர்கள் என்று நம்புகிறேன். நீங்கள் உங்களுக்கு வேண்டிய நண்பர்கள் உறவினர்களிடம் இதை கடைப்பிடிக்குமாறு எடுத்துரைத்தால் குறைந்த பட்சம் பத்து பேராவது கேட்பதற்கு வாய்ப்பு உள்ளது. ஆகவே இது பற்றி அனைவரிடமும் எடுத்துக் கூறுங்கள். பொதுமக்களுக்கு உதவும்  வகையில் தூத்துக்குடி மாவட்ட காவல் துறையில் "அவுட்  ரீச்" என்ற அமைப்பை ஏற்படுத்தப் பட்டுள்ளது. இந்த அமைப்பில் உங்களைப் போன்ற ஆர்வமுள்ள விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் பயன்படுத்த உள்ளோம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் ஊக்குவித்து சிறப்புரையாற்றினார். விழாவில் மாவட்ட ஸ்ட்ரென்த் சங்க பொதுச் செயலாளர் ராஜ்குமார் வரவேற்புரையாற்றினார். அன்னை ஜீவல்லர்ஸ் விநாயகமூர்த்தி முன்னிலை வகித்தார். போட்டிகளை காரப்பேட்டை நாடார் மகமை தலைவர் நடராஜன் துவக்கி வைத்தார். இதில் மத்தியபாகம் காவல் ஆய்வாளர் ஜெயப்பிரகாஷ், காவல்துறை செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அதிகாரி சத்திய நாராயணன், விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.


Previous Post Next Post