தமுமுக சார்பில் இரத்ததான முகாம்


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை இணைந்து நடத்திய இரத்ததான முகாம் கோவில்பட்டியில் நடைபெற்றது. கோவில்பட்டி முகம்மதுசாலிஹாபுரம் உமறுப்புலவர் மண்டபத்தில் நடைபெற்ற இம்முகாமிற்கு, தமுமுக நகரத் தலைவர் அப்துல்காதர் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் யூசுப், மாவட்டச் செயலர் அசன், மாவட்டப் பொருளாளர் நாசர், சுற்றுச்சூழல் அணி மாவட்ட துணைச் செயலர் ஜெய்லானி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொழிலதிபர் வாஹித் முகாமை தொடங்கி வைத்துப் பேசினார். மருத்துவர் தேவசேனா தலைமையிலான மருத்துவக்குழுவினர் முகாமில் பங்கேற்ற 24 பேரிடமிருந்து இரத்தத்தை சேகரித்தனர். மாநில துணைப் பொதுச்செயலர் உஸ்மான்கான், மாநிலச் செயலர் நைனார் முகம்மது, மாநில துணைச் செயலர் பீரப்பா ஆகியோர் பேசினர். இதில், மாவட்ட துணைச் செயலர் முகம்மது இக்பால், நகரச் செயலர் முகம்மது பாரூக் ஷேக், நகர துணைச் செயலர்கள் முகம்மது ஆஷிக், முகம்மது ராசிக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.