தன்னுயிரையே தந்து ஆயிரம் ஆண்டுகளாய் அணையை காக்கும் நல்லம்மன் ! பொங்கி வரும் நொய்யலால் பூரிப்படைகிறாள்

தன்னுயிரையே தந்து ஆயிரம் ஆண்டுகளாய் அணையை காக்கும் நல்லம்மனை நொய்யல் நதி இப்போ குளிரிவிக்குது, யார் இந்த நல்லம்மன்.. இவங்க செஞ்ச தியாகம் என்ன?

 

விரிவான வீடியோ, https://www.youtube.com/watch?v=1_aXajZXJYs&feature=youtu.be


நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கியவர்கள் சோழர்கள் என்றால் அது மிகையல்ல., சுமார் 1000 ஆண்டுகளுக்கும் முன்னர், கொங்கு சோழர்கள் ஆட்சிக்காலத்தில் தான் நொய்யல் ஆற்றில் மிகச்சிறந்த பாசனத்திட்டமானது உருவாக்கப்பட்டது. 
 கோவைக்கு மேற்கே பூண்டி, வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உருவாகி, கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட பகுதிகளில் 165 கி.மீ., உருண்டோடி, கரூர் அருகே காவிரியில் கலக்கும் ஆறு தான் நொய்யல் ஆறு., இப்படி வளம் கொழிக்க செய்து, இன்று தொழிற்சாலை கழிவுகளால் நொந்து போய், சாக்கடையாய் ஓடிக்கொண்டிருக்கும், நொய்யல் ஆற்றில், மங்கலத்துக்கு அருகில் சுமார் 500 அடி நீளம், 25 அடி உயரத்தில் பிரம்மாண்ட கற்களை கொண்டு கட்டப்பட்ட தடுப்பணை ஒன்று உள்ளது. இதன் பெயர் தான் நல்லம்மன் தடுப்பணை 

 

தண்ணீர் வராமல் வற்றிக்கிடக்கும் போது நல்லம்மன் தடுப்பணை. நடுவில் தெரிவது நல்லம்மன் கோவில் (பழைய படம் )
 

1000 ஆண்டுகளை கடந்து அசையாமல் நிற்கும் நல்லம்மன் தடுப்பணையில் தடுக்கப்படும் நீர்தான், ராஜவாய்க்கால் வழியாக ஓடி சின்னாண்டிபாளையம் குளத்துக்கு வந்து சுமார் 500 ஏக்கர் பாசன நிலங்களையும், 100க்கும் மேற்ப்பட்ட பாசன கிணறுகளையும் பயன்பெற செய்து வந்தது. இன்றளவிலும் குளத்துக்கு நீர் வர செய்து, நிலத்தையும், இந்த பகுதியையும் வளமாக்கும், நல்லம்மன் தடுப்பணை உருவாகியதன் பின்னணியில் ஒரு தியாக வரலாறு இருப்பது எத்தணை பேருக்கு தெரியும்?
 ''ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், அணை கட்டுமானத்தின் போது, அணையின் நடுப்பகுதி ஆற்று வெள்ளத்தால் உடைந்து கொண்டே இருந்துள்ளது. அப்போது என்ன செய்வதென்றறியாது மன்னன் திகைக்க, அங்கு ஒரு கன்னிப்பெண்ணை பலியிட்டால் தான் அணை நிலைத்து நிற்கும் என்று யாரோ ஒருவர் கூறி உள்ளார்.  அதை செயலாக்கமும் செய்து விட்டார்கள். ஆம், நல்லம்மன் என்ற பதின்ம வயது சிறுமியை பொம்மை, கிலுகிலுப்பை போன்ற விளையாட்டு பொருட்களை எல்லாம் வாங்கி கொடுத்து, புத்தாடை அணிவித்து, அணைக்கு அழைத்து வந்து பலியிட்டார்களாம். அதன் பிறகு தான் நல்லம்மன் தடுப்பணை கட்டும் பணி முடிந்ததாம். 
 எனவே தான், அணை நடுவில் நல்லம்மனுக்கு கோவில் கட்டி, இன்றளவும் ஆண்டுக்கொரு முறை பொம்மை, கிலுகிலுப்பை, புத்தாடை எல்லாம் படைத்து வழிபடுகிறார்களாம்.

அந்த நல்லம்மனின் தியாகம் தான் இன்றும் அணையாக உயர்ந்து நின்று, தண்ணீரை தேக்கி, சின்னாண்டிபாளையம் குளத்துக்கு கொண்டு வருகிறது. 
தற்போது பெய்த மழையால் பெருக்கெடுத்த நொய்யல், நல்லம்மன் தடுப்பணையில் பொங்கி பாய்ந்து நல்லம்மன் கோவிலை மூழ்கடித்து செல்கிறது. கோவில் மூழ்கினாலும் இதற்காக உயிரையே தந்த நல்லம்மனை நொய்யல் ஆற்றுத்தண்ணீர் குளிர்விக்கிறது. பொங்கி வரும் நொய்யலால் பூரிப்படைகிறாள் நல்லம்மன்! 

 

 

விரிவான வீடியோ, https://www.youtube.com/watch?v=1_aXajZXJYs&feature=youtu.be