சுலப வழியில் கணிதம் கற்கும் செல்போன் செயலியை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் அறிமுகம் செய்தார்

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் சுலப வழியில் கணிதம் கற்கும் வகையில்  இந்தியாலில் முதன் முறையாக புதிய  செல்போன் செயலியை தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் அறிமுகம் செய்துவைத்தார். செய்தியாளர்களிடம் பேசுகையில் :                                   

கணிதமேதை ராமனுஜம் பிறந்த இந்த மண்ணில் ஆஸ்திரேலியாவின் தொழில்நூட்ப வல்லுநா்கள் உருவாக்கிய மாணவா்கள் விளையாடிக்கொண்டே கணிதத்தை எளிதில் கற்கும் புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 21 ஆயிரம் மாணவா்களுக்கும் 501 ஆயிசியா்களுக்கும்  பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மாணவா்கள் ஆடிப்பாடி மகிழ்ந்தே கணிதத்தை கற்றுக்கொள்ளும் முறையில் இச்செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலியை ஆஸ்திரேயாவில் இருந்து வந்து பயிற்சி அளித்துள்ளனா்.  இது சாியான முறையில் இருக்கிறது என்று நாங்கள் புாிந்து கொண்டதின் அடிப்டையில் முதல்வாின் ஒப்புதலுடன் தமிழகம் முழுவதும் இச்செயலி செயல்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.  சீனாவிலிருந்து வருகை புாிந்துள்ள வல்லுநா்கள் வளா்ந்து வரும் விஞ்ஞான உலகை நோக்கி செல்கின்ற வகையில் அறிவியல் ஆய்வகம் 2 ஆயிரம் பள்ளிகளில் தலா ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தடவுள்ளது. அதில் கொடுக்கப்படுகிற எந்த இயந்திரத்தையும் அசம்பிள் செய்து எதை வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளும் வகையில் உருவாக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த ஆய்வகத்தில் கற்கும் மாணவா்கள் சீனாவிற்கு சென்று விமானம் மற்றும் ஹெலிக்காப்டா்களைக்கூட அசம்பில் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சிறந்த மாணவா்களை தோ்வு செய்து சீனாவிற்கு அனுப்ப அரசு முடிவு செய்துள்ளது. கணித்தை மாணவா்கள் எளிய முறையில் கற்று அவா்களது அறிவுக்கூா்மையை பெருக்குவதற்கும் இந்தியாவில் முதல்முறையாக தமிழகத்தில் செயல்படுத்த அரசு நவடிக்கை மேற்கொண்டுள்ளது. சுத்திர தினமான ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று தேசிய கொடி ஏற்றுவதற்கு மட்டுமே பள்ளிகள் திறக்கப்படவேண்டுமே தவிர பள்ளிகள் செயல்பட்டால் உாிய நடவடிக்கை அரசு மேற்கொள்ளும் என அமைச்சா் தொிவித்துள்ளாா்.

 

சுலப வழியில் கணிதம் கற்கும் செல்போன் செயலியை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் அறிமுகம் செய்தார்.