வேப்பூர் தாலுக்காவில் முதலமைச்சர் சிறப்பு குறை தீர்ப்பு முகாம்


 


வேப்பூர் அருகே முதலமைச்சர் சிறப்பு  குறை தீர்ப்பு முகாமில் வேப்பூர் தாசில்தார் செந்தில்வேல் மனு வாங்கினார். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் உத்தரவின் பேரில் அனைத்து ஊராட்சிகளிலும் சிறப்பு குறை தீர்ப்பு முகாம் நடை பெறுகிறது. இந்நிலையில் கடலூர் கலெக்டர் அன்புச்செல்வன், விருத்தாசலம் சார் ஆட்சியர் பிரசாந்த் ஆகியோரின்  ஆலோசனையின் பேரில் வேப்பூர் தாலுக்காவில் வேப்பூர் குறு வட்டத்திலுள்ள 32 வருவாய் கிராமங்களிலும் சிறுபாக்கம் குறு வட்டத்தில் 21 கிராமங்களிலும் சிறப்பு குறை தீர்ப்பு முகாம் 27ஆம் தேதி முதல் 28, 29,30, 31 ந் தேதி வரை  ஐந்து நாட்கள் நடைபெறுகிறது. முதல் நாள் வேப்பூர் குறு வட்டத்தில் சிறுநெசலூர், காளியா மேடு ஆதியூர், பிஞ்சனூர், ஏ சித்தூர், மாளிகைமேடு, மன்னம்பாடி, சிறுபாக்கம், குறு வட்டத்தில் வடபாதி, கொத்தனூர், காஞ்சரங்குளம், கொள வாய் சிறுப்பாக்கம் ஆகிய கிராமங்களில் நடைபெற்றது. முன்னதாக வேப்பூர் வட்டாட்சியர் செந்தில்வேல் சிறு நெசலூர் ஊராட்சியில் குறை கேட்பு மனு வாங்கி தொடங்கி வைத்தார். தாசில்தாருடன் வருவாய் ஆய்வாளர் பழனி, வெற்றிச்செல்வன், சிறு நெசலூர் ஊராட்சிக்கு நியமிக்கப் பட்ட குழு தலைவரான உதவி தோட்டக்கலை அலுவலர் அறிவழகன், ஊர்நல அலுவலர் விக்னேஸ்வரன், கிராம நிர்வாக அலுவலர் ராஜாமணி, ஊராட்சி செயலாளர் கொளஞ்சி, அங்கன்வாடி பணியாளர் நல்லம்மாள், சத்துணவு அமைப்பாளர் பூங்கொடி ஆகியோர் உடனிருந்தனர். பின்னர் இன்று குறைகேட்பு முகாம் நடைபெறும் 12 கிராமங்களுக்கும் சென்று அதற்கென அமைக்கப்பட்ட குழுவினரிடம் ஆய்வு மேற்கொண்டார்.


Previous Post Next Post