நான் பெரிய தொழில் அதிபர் இல்லை சாதாரண விவசாயி தான் : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி


 

நான் பெரிய தொழில் அதிபர் இல்லை சாதாரண விவசாயி தான் எனவும், நாட்டின் பொருளாதாரம் மேம்படுத்தி வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும் என்பது தான் அரசின் லட்சியம் என்றும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதற்கு முன்னதாக சென்னை விமான நிலையத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர். இங்கிலாந்த், அமெரிக்க , துபாய் ஆகிய வெளிநாடுகளுக்கு சென்று தொழிலதிபர்களை சந்தித்து தொழில் துவங்க வருமாறு அழைப்பு விடுக்க செல்கிறேன் என்றும்,  தொழில் முதலீட்டாளர் மாநாட்டை சென்னையில் நடத்தியுள்ளதாகவும், அவர்கள் வெளிநாட்டிற்கு வரவேண்டும் என்று அழைத்தார்கள் அந்த அடிப்படையில் பயணம் மேற்கொள்கிறேன் என்றும் கூறினார். மேலும் அதிகளவில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தான் வெளிநாட்டு பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறிய அவர்,  எவ்வளவு முதலீடு வரும் என்ற செய்தியை சென்று வந்தபின் தெரிவிப்பதாகவும் கூறினார். எதிர்கட்சிகள் விமர்சனம் தொடர்பான கேள்விக்கு..எதிர்கட்சிகள் ஒவ்வொரு முறையும் விமர்சனம் செய்கிறார்கள் என்றும் ஆனால் ஸ்டாலின் அடிக்கடி வெளிநாடு செல்லும் மர்மம் என்ன? சொந்த விஷயம் என்ன? இதுவரை அவர் அதை சொல்ல வில்லை என்றும், நான் சுற்றுப்பயணம் மேற்கொள்வதை சொச்சை படுத்துகிறார் ஆனால் நான் பெரிய தொழில் அதிபர் இல்லை சாதாரண விவசாயி தான் எனவும், நாட்டில் புதிய தொழிற்சாலைகள் வரவேண்டும், பொருளாதாரம் மேம்பட வேண்டும், வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும் என்பது தான் லட்சியம் நோக்கம் எனவும் திட்ட வட்டமாக தெரிவித்தார். புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டப்பின்னும் பின்னும் பல்வேறு நடைமுறைகள் உள்ளதாக சுட்டிக்காட்டிய அவர்,   304 புரிந்துணர்வு ஒப்பந்தம் 2019 ஜனவரி மாதம் போடப்பட்டுள்ளதாகவும் அவை படிப்படியாக நிறைவேற்றப்படும் என்றும், அனைத்து வசதிகளும், அம்சங்களும் கொண்ட நாடு தமிழ்நாடு எனவும், தமிழ்நாட்டில் தொழில் துவங்க ஆர்வம் காட்டுகிறார்கள் அதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதே அரசின் எண்ணம் என்றும் கூறினார்.