பெண்ணாடம் பேருந்து நிலையத்தில் விசிக வினர் ஆர்ப்பாட்டம்

 

திட்டக்குடி அடுத்துள்ள பெண்ணாடம் பேருந்து நிலையத்தில் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில்  அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்து விசிக வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதற்கு பெண்ணாடம் நகர செயலாளர் ஆற்றலரசு தலைமை தாங்கினார். திட்டக்குடி சட்டமன்ற துணைச் செயலாளர் வேந்தன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலையை உடைத்த குற்றவாளிகளை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் எனவும் இனி வரும் காலங்களில் இது போன்ற குற்றச் சம்பவங்கள் நடக்காமல் இருப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் நல்லூர் ஒன்றிய செயலாளர் ஆனந்தன் மாநில செயற்குழு உறுப்பினர் வேல்முருகன் மாவட்ட துணை அமைப்பாளர் செம்மல் மாவட்ட துணை அமைப்பாளர் வேலுமணி நகர துணை செயலாளர் பன்னீர்செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.