அடிப்படை வசதிகள் செய்து தரும்படி நகராட்சி ஆணையரிடம் மனு


சென்னை பல்லாவரம் நகராட்சிக்குட்பட்ட 12வது வார்டு திருவள்ளுவர் நகர் பகுதி பொது மக்களுக்கு, குடிநீர் வசதி, சாலை சீரமைத்தல்,கால்வாய்களை தூர் வாருதல், தெரு விளக்குகள் அமைத்தல் போன்ற அடிப்படை வசதி எதுவும் நகராட்சி நிர்வாகம் செய்து கொடுக்கவில்லை என் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் தேவ அருள் பிரகாசம் மாவட்ட துணை செயலாளர் வழக்கறிஞர் பொற்செழியன், ஆகியோர் அப்பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரும்படி பல்லாவரம் நகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனர். மனுவை ஏற்றுக் கொண்ட  ஆணையர் இரண்டோரு நாட்களில் பொது மக்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்த்து வைப்பதாக வாக்குறுதி அளித்தார். இதில் கட்சியின் நிர்வாகிகள் பந்தல் ரமேஷ்,  12வது வட்ட செயலாளர் கார்த்திகேயன், பொருளாளர் மணிகண்டன், துணை செயலாளர்கள் புகழேந்தி, மகேந்திரன், விஜய் ராஜ்,மற்றும் அப்பகுதி மகளிர் உட்பட்ட பலர் கலந்து கொண்டனர்